ஆளுமை:விஸ்வநாதன், முனியாண்டி
நூலகம் இல் இருந்து
					| பெயர் | விஸ்வநாதன் | 
| தந்தை | முனியாண்டி | 
| தாய் | புவனேஸ்வரி | 
| பிறப்பு | 1970.05.14 | 
| இறப்பு | - | 
| ஊர் | கல்லடி, வெருகல், திருகோணமலை | 
| வகை | முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
முனியாண்டி விஸ்வநாதன் (1970.05.14) இவர் கல்லடி - வெருகல் - திருகோணமலையைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஆவார். இவரது தந்தை முனியாண்டி, தாய் புவனேஸ்வரி. இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர தனது பாடசாலைக் கல்வியினை தரம் எட்டு வரைக்கும் திருகோணமலை மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் கற்றுள்ளார். தற்காலத்தில் காணப்படுகின்ற குறித்த பூர்வகுடிகளின் சமூகத்தின் ஓர் பன்முக ஆளுமை கொண்டவராகவும், தனது சமூகம் சார்ந்த உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு எதிராக அமைப்பாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய ஓர் அரசியல் மயப்பட்ட தன்மையினைக் கொண்டவராகவும் கூட காணப்படுகின்றார். பிரதான தொழிலாக கடற்றொழிலை மேற்கொள்ளும் இவர் மீன் சந்தைப்படுத்துனராகவும் கூட காணப்படுகின்றார்.