ஆளுமை:ஸாஹிரா பானு, முனாஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸாஹிரா பானு
தந்தை முனாஸ்
தாய் ஷஹீதா
பிறப்பு 1990.05.04
ஊர் அட்டாளைச்சேனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸாஹிரா பானு, முனாஸ் (1990.05.04) அம்பாறை அட்டாளைச்சேனையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முனாஸ்; தாய் ஷஹீதா. சேனையூர் ஸஹி என்னும் புனைபெயரில் ஆக்கங்களை எழுதி வருகிறார். ஆரம்பக் கல்விக் முதல் உயர் கல்வி வரை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கற்றார். தற்பொழுது தகவல் தொழில்நுட்பக் கற்கை நெறியினைக் கற்றுக் கொண்டிருக்கின்றார். பாடசாலைக்காலத்தில் இருந்தே கவிதைகளை எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் தினகரன், தினக்குரல், மெட்ரோநியூஸ், நவமணி போன்ற நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. முகநூல் ஊடாக கவிதைகள் எழுதி பல போட்டிகளில் பங்கு பற்றியுள்ளார். முகநூல் போட்டிகளின் ஊடாக சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். கவியுலகப் பூஞ்சோலை, சங்கத்தமிழ் கவிதைப் பூங்கா, கவிநுட்பம் போன்ற குழுமங்களில் நிருவாகியாகவும் செயற்படுகிறார். பிரான்ஸ்ஸில் வெளியாகும் தமிழ் நெஞ்சம் பத்திரிகையிலும் இவரது கவிதை வந்துள்ளது. கவியுலகப் பூஞ்சோலையின் முள்ளி வாய்க்கால் சுவடுகள் நூலிலும் இவரது கவிதை இடம் பெற்றுள்ளது. சமூகம், பெண்ணியம், வாழ்க்கை, வலி, வறுமை, காதல், கண்ணீரென இவரது கவிதைகளை உணர்வு பூர்வமாக எழுதி வருகிறார். எழுத்தாளர் சாஹிரா பானு கவிதைத் தொகுப்பொன்றை மிக விரைவில் வெளியிட உள்ளார்.


விருதுகள்

கவிச்சிற்பி இளங்கவிஞர் கவித்தென்றல் இலக்கிய முரசு


குறிப்பு : மேற்படி பதிவு ஸாஹிரா பானு, முனாஸ் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.