ஆளுமை:ஹனிபா, எஸ். எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செய்யது மொகம்மட் ஹனிபா
தந்தை செய்யத் ஹாஜியார்
தாய் ஸபியா உம்மா
பிறப்பு 1927.07.24
இறப்பு 2009.05.29
ஊர் கல்ஹின்னை, கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செய்யது மொகம்மட் ஹனிபா, செய்யத் ஹாஜியார் (1927.07.24 - 2009.05.29) கண்டி, கல்ஹின்னையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், பன்னூலாசிரியர், பள்ளி ஆசிரியர், வழக்கறிஞர், வெளியீட்டாளர், ஆய்வாளர். இவரது தந்தை செய்யத் ஹாஜியார்; தாய் சபியா உம்மா. இவர் கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலை, மாத்தளை விஜய கல்லூரி, மாத்தளை சென். தோமஸ் கல்லூரி, கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரி, கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்வியைப் பெற்றுப் பின்னர் சட்டக்கல்வியைப் பயின்று 1973 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

1956 இல் பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெற்று கொழும்பு டென்காம் பாடசாலையில் (தற்போது மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மு. மகா வித்தியாலயம்) ஆசிரியர் சேவையில் இணைந்தார். இவர் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் தனது கிராமத்தில் கல்ஹின்னை தமிழ் மன்றத்தை நிறுவி, நூல்வெளியீட்டு முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியவர். தனது இலக்கிய வேட்கை காரணமாக இரண்டு ஆண்டுகளில் ஆசிரியத் தொழிலைத் துறந்து லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து தினகரன் உதவி ஆசிரியராக ஏழாண்டுகள் பணியாற்றித் தொடர்ந்து Ceylon Observer இல் துணையாசிரியராகவும், Daily News பத்திரிகைகளில் மூன்று வருடங்கள் பணியாற்றிப் பின்னர் 1971 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட உதவிச் செய்திப் பிரிவு ஆசிரியராகப் பணியாற்றியவர்.

இவர் 1982 இல் மலையக் கலை இலக்கியப் பேரவையின் உபதலைவராகவும் 1984 ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் அதன் இலக்கியக் குழுச் செயலாளராகவும் 1986 ஆம் ஆண்டு கொழும்பு மாளிகாவத்தை தேசியக் கவுன்சில் வை.எம்.எம்.ஏ கெளரவ சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரைகளையும் 15 இற்கும் மேர்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவரால் எழுதப்பட்ட நூல்களில் உலகம் புகழும் உத்தம தூதர், துஆவின் சிறப்பு, உத்தமர் உவைஸ், இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி, THE GRADE SON ஆகியன குறிப்பிடத்தக்கன. இவர் மகாகவி பாரதி என்ற நூலை சிங்களத்தில் வெளியிட்டதுடன் உத்தும் நபி துமானோ, உவைஸ் சரித்திரம் ஆகிய நூல்களைச் சிங்களத்தில் எழுதி வெளியிட்டார். இவர் கடைசியாக எழுதி வெளியிட்ட நூல் அன்னை சோனியா காந்தி என்பதாகும். இவர் மலை ஒளி என்ற நூலின் வெளியீட்டு விழாவன்று தமிழ்க்காவலர் என்னும் பட்டமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

ஹனிபா, எஸ். எம்.

-

வளங்கள்

  • நூலக எண்: 1663 பக்கங்கள் 25-30
  • நூலக எண்: 13943 பக்கங்கள் 160-167
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 04-06
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஹனிபா,_எஸ்._எம்.&oldid=408782" இருந்து மீள்விக்கப்பட்டது