நிறுவனம்ːகிளி/சிவிக்சென்ரர் சித்தி விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/சிவிக்சென்ரர் சித்தி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் வட்டக்கச்சி
முகவரி சிவிக்சென்ரர் வட்டக்கச்சி, கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இந்துமா கடல் நடுவே முத்தென விளங்கும் ஈழ நாட்டின் வடபால் அமைந்த இரணைமடு வாவி சூழ் வளம் நிறைந்த கிளிநொச்சி மாநகரில் நெல், தென்னை, மா, பலா முதலிய வளங்களை தன்னகத்தே கொண்ட வட்டக்கச்சி கிராம நுழைவாயில், விவசாய பண்ணைக்கருகில் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தின் பூர்வீகம் பற்றி நோக்கும்போது 1937ஆம் ஆண்டு தொடக்கம் 1944 ஆம் ஆண்டு ஆண்டளவில் வட்டக்கச்சி அரசின் விவசாய பண்ணையில் கடமையாற்றிய ஊழியர்களின் ஆற்றங்கரையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒருவரின் காலில் மணிக்கட்டு வெட்டுக்காயம் ஏற்பட்டது. ஆகாயம் மாறும் போதுதான் அந்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. ஆகவே அந்த இடத்தில் ஏதோ இருப்பதாக நினைத்து வணங்கினார்கள். வெட்டுக்காயம் நிவாரணம் ஆகும் காட்சி கிடைத்தது அதனால் அவர்கள் மண்வெட்டி வெட்டுக்காயம் ஏற்பட்ட இடத்தில் ஒரு உருவம் வைத்து வழிபட்டனர்.