நிறுவனம்ːகிளி/வட்டக்கச்சி வட்டக்கச்சி சோதி விநாயகர் ஆலயம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/வட்டக்கச்சி வட்டக்கச்சி சோதி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் வட்டக்கச்சி
முகவரி கட்சன் வீதி வட்டக்கச்சி, கிளிநொச்சி
தொலைபேசி 0771253950
மின்னஞ்சல்
வலைத்தளம்

சப்த தீவுகளில் ஒன்றான குறிகட்டுவான் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க சோதி என்பவர் தென் இந்தியாவில் இருந்து வருகை தந்து சிற்ப ஆசிரியர்களுடன் சேர்ந்து கல்லு பொழிவது அவரது தொழிலாக இருந்தது. ஒரு நாள் அனலைதீவு ஐயனார் ஆலய பரிபாலன சபையினர் சோதி என்ற இளைஞரோடு வேலை செய்யும் சிற்பாசாரிகளை தங்களது ஆலயத்திற்கு வந்து வேலை செய்யும்படி அழைத்ததன் காரணமாக யாவரும் அங்கு சென்று சிற்ப வேலைகளில் ஈடுபட்டனர். அங்கு செதுக்கப்பட்ட பிள்ளையார் சிலையின் அமைப்பும் அழகும் மனதை குழப்பியது. அந்த சிலையை எப்படியாவது தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் இரவோடு இரவாக ஒரு கடகத்தில் விநாயகரை தூக்கி வைத்துக் கொண்டு நடை பயணமானார். மாரிப்பொழுது மழை பெய்து எங்கும் ஒரே வெள்ளம். வீதி எது நிலம் எது என்று தெரியாத நிலமை. அரையில் ஒரு துவாய் துண்டுடனும் கடகத்தில் விநாயகருமாக குறிக்கட்டுவானுக்கு செல்லாது கால் போன போக்கில் பயணத்தைத் தொடர்ந்தார்.

10.10.1953ஆம் ஆண்டு அன்று வட்டக்கச்சி கிராமம் குடியேற்றப்பட்டது. பல இடங்களிலிருந்தும் மக்கள் குடியேற்றத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தனர். சோதிச் சாமியாரும் வட்டக்கச்சி கிராமத்திற்கு வந்ததால் தன்னை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று எண்ணினார். கிளிநொச்சி வந்து காக்காகடை சந்தி வழியாக பிள்ளையாருடன் வட்டக்கச்சி வீதியில் இறங்கியதும் இருட்டிவிட்டது. பன்னங்கண்டி பாலத்திற்கு அண்மையில் வந்துவிட்டார் எங்கும் ஒரே வெள்ளம் அதனால் தனியாக செல்ல அவருக்குப் பயமாக இருந்ததன் காரணமாக யாரும் வரமாட்டார்களா? என ஏங்கிக்கொண்டிருந்த வேளை வெள்ளை வேட்டி சேட்டுடன் ஒருவர் வந்து ஏன் இதில் இருக்கின்றாய் நான் இவ்வழியாக போகப்போகின்றேன் நீயும் வருகிறாயா? என வினாவினார். உடனே கடகத்தில் இருந்த பிள்ளையாரையும் தூக்கிக் கொண்டு இருவரும் நீண்ட தூரம் வரை வெள்ளத்தில் நடந்து வந்தனர். சிறிது தூரம் வந்து பாமடி வீதியில் திரும்பியதும் தன்னுடன் வந்த வரை காணாத சுற்றும் முற்றும் பார்த்தார். ஒரு வேளை பாமடி விநாயகர் தான் தனக்கு வந்து உதவினார் என எண்ணி அவரை வணங்கி விட்டு நடந்து கட்சன் வீதியில் உள்ள தனது உறவினர் திரு.குமாரலிங்கம் என்பவர் வீட்டை அடைந்து அங்கு தங்கினார். விடிந்ததும் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் காணியில் தகரக் கொட்டகை அமைத்து அவ்விடத்தில் பிள்ளையாரை வைத்து வழிபட்டார். அத்துடன் அவரே பூசகராகவும் அவ்வாலய வளர்ச்சிக்கு நிதி, பொருள் என்பவற்றை சேகரித்து அவ்வாலய வளர்ச்சிக்கும் வித்திட்டார். 1953ஆம் ஆண்டு தொடக்கம் சோதிச் சாவாமியாரே ஆலயத்தை நிர்வகித்து வரும் போது 1975இல் சுகவீனமுற்று இறைபதம் அடைந்தார். அதன்பின்னர் நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்ட பூசகர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இப்படியாக பல நிர்வாகங்கள் தெரிவு செய்யப்பட்டு சோதி சாமியார் போட்ட அத்திவாரத்திலேயே ஆலயம் அமைக்கப்பட்டு முதல் முறையாக 20-10-1993ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சோதி சாமியார் உருவாக்கிய காரணத்தினால் அவ்வாலயம் சோதி விநாயகர் ஆலயம் என அழைக்கப்படுகின்றது. இப்போது இரண்டாவது தடவையாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வான்புகழ்கொண்டு நிற்கின்றது.