நிறுவனம்ːகிளி/ ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் வட்டக்கச்சி
முகவரி வட்டக்கச்சி தெற்கு,கிளிநொச்சி
தொலைபேசி 0771389456
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

1953 ஆம் ஆண்டு தொடங்கிய கிளிநொச்சியிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் வட்டக்கச்சி குடியேற்றக் கிராமத்தின் தெற்கு பகுதியில் 1955 ஆம் ஆண்டு கணபதிப்பிள்ளை, அவருடைய மகன் சண்முகநாதன், புலவர் கந்தையா, உடையார் சண்முகம், மற்றும் இராசேந்திரன் இணைந்து பாலை மரத்தடியில் சிறு கொட்டகை அமைத்து ஓலையால் வேய்ந்து நாகதம்பிரானை வணங்கி வந்தனர்.

பாடசாலை, விளையாட்டு மைதானம், இரணைமடு குளத்தின் வாய்க்கால் என்பவற்றை சூழ கொண்டு காணப்பட்டது. ஆலயத்தின் மூல மூர்த்தி சிவன் ஆகும். கணபதிப்பிள்ளை மற்றும் அவரது பேரன் தயாபரன் ஆகியோர் விளக்கேற்றி வந்தனர். 1968 ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் இடம்பெற்றது. கலசத்தில் காணப்படும் தகடு மற்றும் ஊர் காவல் பொருட்கள் 12 ஆண்டுகளுக்கு மட்டுமே அழிவுறாது இருக்கும் எனும் மூதாதையரின் நம்பிக்கைக்கு அமைய 2 ஆவது கும்பாபிஷேகம் 1980 ஆம் ஆண்டில் 3ஆவது கும்பாபிஷேகம் 1992ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயம் கட்டடமாக அமைவதற்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் காசிப்பிள்ளை விநாயகமூர்த்தி, நடேசபிள்ளை ஆவார். கோபுரம் இல்லாத மூலஸ்தானமாக கட்டப்பட்டது. 4வது கும்பாபிஷேகம் 2004 ஆம் ஆண்டு இடம்பெற இறையருள் கைகூடவில்லை, காரணம் உள்நாட்டு யுத்தம் மக்களை இடப்பெயர்வுக்கு உள்ளாக்கியது. காலம் உருண்டோடி 2011 ஆம் ஆண்டில் மீள்குடியேற்றம் இடம் பெற்றதன் பின் ஆலய அறங்காவலர்கள் ஆலயத்தில் மூலஸ்தானம் கோபுரமாக்க முடிவெடுத்தார்கள், 2019 ஆம் ஆண்டில் ஆலயத்திற்கு உரிய காணியில் கோபுரத்துடன் கூடிய மூலஸ்தானம் அமைத்து, 2021 ஆம் ஆண்டில் ஆடி மாதம் கும்பாபிஷேகம் இடம்பெற்றது. இவ் ஆலயத்தில் இரு வேளை பூஜை நடைபெறுகிறது. அதாவது காலை 7 மணி மாலை 5 மணி பூஜை நடைபெறுகிறது. குருக்களாக மகேந்திர சர்மா (2020,2021) இருக்கிறார். சிவராத்திரி, திருவெம்பா, பிள்ளையார் கதை, சரஸ்வதி பூஜை என்பன சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வாலயத்தின் தல விருட்சமாக பாலை காணப்படுகின்றது. இங்கு 40 வருடமாக திருவருள்மிகு இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஊர்வலம் வருகின்ற வேளை இவ்வாலய சந்நிதானத்தில் தங்கி அன்னதானம் வழங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து செல்வது சிறப்பம்சமாகும்.