நிறுவனம்:கிளிநொச்சி கந்தசுவாமி கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் கிளிநொச்சி
முகவரி கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


சைவ உலகத்தொண்டிலும் இலங்கை அரசியலிலும் தமிழர்களுடைய சைவப் பாரம்பரிய பண்பாட்டுக் கல்வியை மேம்படுத்துவதிலும் அளப்பரிய தொண்டாற்றியவரும் அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் அற்றவராகத் திகழ்ந்த மாமனிதர் சேர்.பொன்.இராமநாதன் அவர்களுடைய தொடர்புடையது கிளி நகர் கந்தசுவாமி கோவில். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிளிநொச்சியூடாகப் புகையிரதப் பாதை அமைத்தல் என்பவற்றோடு இரணைமடுக்குளக் கட்டுமானப் பணிகளும் நடந்தன. இரணைமடுக்குளக் கட்டுமானப் பணிfளை முன்னின்று முயற்சித்தவரான சேர்.பொன்.இராமநாதன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் பாதையில் கிளிநொச்சியில் ஒரு விடுதி அமைக்க எண்ணினார். அதன் மொத்த வடிவமே பழைய வைத்தியசாலை நுழைவாயிலுக்கு எதிரே உள்ள விடுதியாகும். யாழில் இருந்து வரும்போதும் கொழும்பில் இருந்து திரும்பி யாழ் செல்லும் போதும் இவ்விடுதியில் தங்கி குறிப்பாக இப் பகுதி அபிவிருத்தி வேலைகளை குறிப்பாக இரணைமடுக்குள கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்தார்.இவர் தங்கும் நாட்களில் இவரைச் சந்தித்த அன்பர்கள் இங்கு ஒரு சைவ ஆலயம் கட்டித் தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

அக் கோரிக்கை நாயுக்கு நாள் வலுத்து வந்தது. இதன் பயனாக கிளிநொச்சியில் உள்ள சைவ வழிபாட்டாளருக்கான காணியை அப்போதைய கிராம சேவையாளராகப் பணியாற்றிய முகாந்தரம் உயர்திரு. வெற்றிவேலு அவர்கள் தனக்கு இருந்த காணியை ஆலயத்திற்குக் கொடுப்பதற்கு முன்வந்தார். அக்காணியை சைவ அடியார்கள் காடு வெட்டித் துப்புரவு செய்தனர்.பின்னர் தற்போது இவ் ஆலயத்தின் களஞ்சிய அறையாக அமைந்துள்ள இடத்தில் ஓலைக் கொட்டில் ஒன்று அமைத்து ஒரு வேலாயுதத்தை வைத்து வழிபடத் தொடங்கினர். பின்னர் படிப்படியாக ஆலயத்திற்கு நிலையம் எடுத்து அத்திவாரம் போட ஆயத்தமானது.இவ் ஆலயம் கிழக்கு வாசலாக அமைப்பற்கு முடிபு எடுக்கப்பட்டது.அந்த நேரம் அங்கு வந்த சேர்.பொன்.இராமநாதனின் திரு.சு. நடேசபிள்ளை அவர்கள் இவ் ஆலயத்தை காணிக்கு மேற்குப் புறமாக கண்டி வீதி அமைந்துள்ள படியாலும் மூலஸ்தானம் மேற்கு வாசலாக இருக்கலாம் என்றும் இந்தியாவில் பல ஆலயங்கள் மேற்கு வாயில் அமைந்துள்ளது எனவும் எடுத்துக்கூறி மேற்கு வாயில் கோயிலாகக் கட்டப்பட்டது. கிளிநொச்சியில் அன்றைய காலகட்டத்தில் கிடைத்த தகவலின் படி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலமாக முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கலாம்.

இதே வேளை இரணைமடுக் குளக் கட்டுமானப் பணியில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றிய வெற்றிவேலு விதானையாரது தலைமையில் இவ் ஆலயப்பணிகள் நடைபெற்றன. இவர் தொடக்கி வைத்த பணிகளை இவரது மகள் சாந்தநாயகி கந்தையா குடும்பத்தினரால் தொடரப்பட்டது. இக்காலத்தில் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்றன.இதற்குப் பூசகராக பலாலி ஊரைச் சேர்ந்த அதியுயர் பிராமண வம்சத்தைச் சேர்ந்த குமாரசுவாமி சர்மா அவர்கள் நியமிக்கப்பட்டார். இவரின் விடாமுயற்சியினால் இவ் ஆலயம் படிப்படியாகக வளர்ச்சி பெற்ற வந்தது.

இவ் ஆலயத்தில் நாளாந்தப் பூசை செய்வதற்கும் ஐயாவின் வேதனம் கொடுப்பதற்கும் மிகவும் கஷ்ரமான நிலை ஏற்பட்டது. அக்காலத்தில் கிளிநொச்சிப் பாராளுமன்ற உறுப்பினராகவும், உதவி நீர்ப்பாசன அத்தியட்சகருமான உயர்திரு.அ. சிவசுந்தரம் அவர்களின் விடாமுயற்சியினாலும் அதேகாலத்தில் யாழ். மாவட்டத்தில் அரசாங்க அதிபராக இருந்த உயர்திரு.ம. சிறிகாந்தா அவர்களின் பிள்ளைகள் என்று கூறக்கூடிய வகையில் 1958 ஆம் ஆண்டு படித்த வாலிபர் குடியேற்றத் திட்டத்தில் வசித்து வந்த வயதில் மிகக்குறைந்தவருமாகிய ஓர் அன்பர் முன்வந்து அகடகாலத்தில் கண்டி வீதியில் அமைந்துள்ள வர்த்தகப் பெரு மக்களின் ஆதரவுடன் ஒரு கடைக்கு ஒரு ரூபா வீதம் நிதியை வசூலித்து மாதாமாதம் ஆலயப்பூசகரின் வேதனமும், பூசைச்செலவும் கொடுக்கக் கூடிய வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் V.R.T என்றழைக்கப்படுகின்ற வே.இ.தம்பிப்பிள்ளை அவர்களின் ஆலோசனைக்கமைவாக மாதமொருவர் ஒரு பூசையை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக ஒழுங்கு செய்யப்பட்டது. அதன் அமைவாக உயர்திரு. ஆர்.சி.முருகேசு(சமாதான நீதவான்), உயர்திரு. வே.இ.தம்பிப்பிள்ளை,(வர்த்தகர்), உயர்திரு.சுந்தரலிங்கம்(விவசாயி),உயர்திரு. சாந்தநாயகி கந்தையா, உயர்திரு. வே.இராசேந்திரம் (ஓய்வூதியர்) இவர்கள் ஐவரும் ஐந்து மாத பூசைச்செலவைப் பொறுப்பேற்றனர்.அதன் பின் வளர்ச்சி பெறப்பெற உண்டியலில் சேரும் பணத்தையும் வைத்து ஒரு வருடத்திற்கான பூசைகள் நடைபெற்றன.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட காலமாக சைவத்தையும் தமிழையும் வளர்த்த திருநெறிக்கழகத்தின் செயலாளராகத் தொண்டாற்றிய cயர்திரு. த. நல்லதம்பி அவர்களின் பெரு முயற்சியால் இவ் ஆலயத்திற்கு ஒரு அறங்காவலர் சபை அமைக்க வேண்டுமெனக் கருத்தில் கொண்டு அப்போதைய யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த உயர“திரு.ம.சிறிகாந்தா அவர்களின் ஆலோசனைப்படியும், அவரின் துணையுடனும் ஒரு அறங்காவலர் சபை தெரிவு செய்யப்பட்டது. முதல் அறங்காவலர் சபையின் உயர்திரு. ஆர்.சி.முருகேசு(சமாதான நீதவான்) தலைவராகவும், கனகபுரத்தை சேர்ந்த உயர்திரு.நா. சோதிநாதன் அவர்கள் செயலாளராகவும், கரடிப்போக்கு ஈஸ்வரன் அரிசி ஆலை உரிமையாளர் முகாமையாளராகவும், உயர்திரு.சு.பரமலிங்கம் அவர்கள் உபசெயலாளராகவும், கரடிப்போக்கு வர்த்தகர் வே.இ.தம்பிப்பிள்ளை அவர்கள் பொருளாளராகவும் கொண்ட 19 பேர் உறுப்பினர்களாகக்கொண்ட அறங்காவலர் சபை அமைக்கப்பட்டது. ஏற்கெனவே இருந்த தலைவரும், செயலாளரும் காலம் சென்றமையினால் உயர்திரு.சி.சுந்தரலிங்கம் ஐயா அவர்கள் தலைவராகவும், கணேசபுரத்தைச் சேர்ந்த இ.நடராஜர் அவர்கள் செயலாளராகவும், வர்த்தகர் திரு.க.கந்தப்பிள்ளை பொருளாளராகவும் கொண்ட சபை அமைக்கப்பட்டது. அதன் பின் தலைவர் காலமானதால் திரு. சோமசுந்தரம், 3ஆம் வாய்க்காலைச் சேர்ந்த விவசாயி திரு.த. சோமசுந்தரம் தலைவராகவும், பரவிப்பாஞ்சானைச் சேர்ந்த திரு. சி.விக்கினராஜா செயலாளராகவும், கணேசபுரத்தைச் சேர்ந்த திரு. இ.நடராஜா பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டு அதன் பின் திரு.சோமசுந்தரம் அவர்கள் தலைவராகவும், திருநகரைச் சேர்ந்த திரு.சு.தியாகலிங்கம் அவர்கள் செயலாளராகவும்,காரைநகரைச் சேர்ந்த வர்த்தகர்.திரு.க.சோமசுந்தரம் அவர்களைப் பொருளாளராகவும் கொண்டு தெரிவு செய்யப்பட்டது.அதன்பின் திரு.சோமசுந்தரம் செயற்பட முடியாமையினால் பரவிப்பாஞ்சானைச் சேர்ந்த திரு.பொன்.வினாயகமூர்த்தி அவர்கள் தலைவராகவும், தியாகலிங்கம் அவர்கள் இறந்ததால் வர்த்தகர் திரு. செல்வரட்ணம் அவர்கள் செயலாளராகவும்,உயர்திரு. சிவானந்தம் அவர்கள் பொருளாளராகவும் கொண்ட சபை தெரிவு செய்யப்பட்டது. அதன் பின் தலைவர் கடமையில் இருந்த பொன்.வினாயகமூர்த்தி இறந்த படியால் திரு.க.கந்தசுவாமி அவர்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் கடமையில் இருந்து ஓய்வு பெற்ற படியினால் கிளிநொச்சியில் பிறந்து கல்வி கற்று தற்போது மக்கள் வங்கி முகாமையாளராகக் கடமையாற்றும் உயர்திரு.ச. ஸ்ரீகௌரிபாலா அவர்கள் தலைமையில் தற்போது ஆலய அறங்காவற்சபை நடைபெறுகின்றது.