நிறுவனம்:கிளி/ மண்ணித்தலை சிவன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மண்ணித்தலை சிவன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் மண்ணித்தலை
முகவரி மண்ணித்தலை, பூநகரி
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

சோழர் ஆட்சிக் காலத்தில் வட இலங்கையில் அரச தலை நகரங்களாக விளங்கியமைக்கான சிறந்த தொல்லியற் சான்றாக மண்ணித்தலை சிவன் ஆலயம் விளங்குகிறது.இவ் ஆலயம் பெருமளவு இடிந்த நிலையில் காணப்பட்டாலும் அக்கால கலை மரபை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. இங்கு லிங்கத்தையும் , சூலத்தையுமே தெய்வச் சின்னங்களாகக் கொண்டமைந்துள்ளன. இதனை விநாயகர் ஆலயமாகவே இவ்வூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். கோறல்கல், செங்கல், சுதை என்பன கொண்டு அமைக்கப்பட்ட இவ்வாலயம் 21 அடி நீளத்தையும் 12 ஆடி அகலத்தையும் மூன்று தளங்களைக் கொண்ட 7 அடி உயரமான விமானத்தையும் கொண்ட சிறிய ஆலயமாகும், இதன் தேவ கோஸ்டங்கள், கர்ணக்கடகள்,குதம், சாலை, பஞ்சரம் என்பன அப்படியே சோழக்கலை மரபை ஒத்ததாக உள்ளன.