நிறுவனம்:குமரபுரம், பரந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பசுந்தாரகை விவசாய மகளிர் அமைப்பு
வகை அரச சார்பற்ற நிறுவனம்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் குமரபுரம் பரந்தன்
முகவரி குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி
தொலைபேசி +94-773062634
மின்னஞ்சல்
வலைத்தளம்

குமரபுரம், பரந்தன், கிளிநொச்சியில் அமைந்துள்ளது பசுந்தாரகை விவசாய மகளிர் அமைப்பு. 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஸ்தாபகர்களாக ஸ்ரீகரன், சுகிர்தினி, ஜானு விஜயநாதன் ஆகியோர் விளங்குகின்றனர். இவ் அமைப்பின் பிரதான குறிக்கோளாக கிராமத்தில் உள்ள பொருட்களையும் சுற்றுச்சூழலில் இருக்கும் குப்பை கூளங்களையும் பயன்படுத்தி சேதன பசளையை தயாரித்தல், எதிர்கால சந்ததியினருக்கு நஞ்சற்ற உணவுகளை வழங்குதல் என்பவையாகும். இவ்வமைப்பில் 38 உறுப்பினர்கள் தற்பொழுது இருக்கிறார்கள். இயற்கை விவசாயம் தொடர்பில் விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து பயிற்சிக் கருத்தரங்குகள் நடத்தி வருகிறது இந்த அமைப்பு. இவ்வமைப்பில் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்ட பல பெண்கள் அடையாளம் காணப்பட்டு மாவட்ட மாகாண மட்டத்தில் விவசாயத்திற்கான பல விருதுகளையும் பெற்றுள்ளனர். அரிசி மா, குரக்கன் மா, குறிஞ்சா மா, வல்லாரை மா, முருங்கையிலை மா, பொன்னாங்கண்ணி மா, வடகம், அசோலா ஆகியவற்றை பெண்கள் இணைந்து தயாரித்து சந்தைக்கு கொடுக்கின்றனர். இதன் ஊடாக பெண்கள் தங்களுக்குரிய ஒரு வருமானத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.