நிறுவனம்:கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கொழும்பு
ஊர் பம்பலப்பிட்டி
முகவரி ஆர் ஏ டீமெல் மாவத்தை, பம்பலப்பிட்டி, கொழும்பு-04
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இக் கல்லூரி 1981ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் கட்டத் திறப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக வந்த ஜனாதிபதிக் ஜே.ஆர் ஜெயவர்தன இந்துக் கல்லூரியின் அதிபர் திரு.த.சங்கரலிங்கம் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் புதிய கதிரேசன் கோவிலின் தர்மகர்தாவான பழனியப்பாச் செட்டியாரிடமிருந்து தற்போது கல்லூரி அமைந்திருக்கும் காணி 1979ஆம் ஆண்டு கல்லூரிக்கு கிடைக்கப்பெற்றது. அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி நிசங்க விஜயரத்ன அவர்களும் இந்துக்கல்லூரியை அமைப்பதில் பெரும் பங்காற்றினார். 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியானது முதலில் ஆரம்ப வகுப்பையும், ஆறாம் தரத்தைக் கொண்டதாகவும், 24 மாணவர்களையும் இரண்டு ஆசிரியர்களையும் கொண்டதாகவும் இருந்தது. இக்கல்லூரியின் முதலாவது அதிபராக திருமதி ஞா.புவனராஜன் 1981ஆம் ஆண்டு நியமனம் பெற்றார். உதவியாக திருமதி மங்கயர்க்கரசி அருணகிரிநாதன் அவர்கள் முதல் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். தற்போது கல்லூரி இயங்கும் முதற் கட்டட வேலைகள் முடியும் வரை பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியிலேயே வகுப்புக்கள் நடைபெற்றன.

1982ஆம் ஆண்டு ஜுன் 25ஆம் திகதி இக்கல்லூரியின் சம்பிரதாய பூர்வமான முதலாவது கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன, திரு.ரணில் விக்ரமசிங்ஹ, திரு.அனுரா பஸ்ரியன், அப்போதைய கல்விப் பணிப்பாளர் கே.எஸ்.பாலிகாகற ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கல்லூரியின் ஆரம்பகால ஸ்தாபகர்களாக காலஞ்சென்ற திரு.C.இரங்கநாதன், சட்டத்தரணியும், முன்னைனாள் மேல் மாகாண ஆளுநர் M.சுவாமிநாதன், கலாநிதி பழனியப்பச்செட்டியார், திரு.N.சிவபாதசுந்தரம், திரு.T.சுந்தரலிங்கம், திரு.எம்.பாலசுப்பிரமணியம், திரு.வி.பாலசுப்பிரமணியம், திரு.கே.சிவகணநாதன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.


வளங்கள்

  • நூலக எண்: 8704 பக்கங்கள் {{{2}}}