நிறுவனம்:சமாயத்துப் பிள்ளையார் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சமாயத்துப் பிள்ளையார் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் பன் மதவாச்சி
முகவரி சமாயத்துப் பிள்ளையார் ஆலயம், பன் மதவாச்சி, திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

நீண்ட கால வரலாற்றை கொண்ட பன் மதவாச்சி கிராமத்தில் காணப்படும் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றே, சமாயத்துப் பிள்ளையார் ஆலயம் ஆகும். இது குறித்த கிராமத்தை உருவாக்கிய கங்காதரன் சுவாமி அவர்களால் மக்களின் வழிபாட்டுக்கு என்று 1961 காலப்பகுதிகளில் உருவாக்கப்பட்ட ஆலயம் ஆகும். இந்த ஆலயம் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தின் போது பாதிப்படைந்து கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. 2010 ஆம் ஆண்டு கிராம மக்கள் மீளக் குடியேற்றப்பட்ட போதும், இன்னும் இந்த ஆலயம் மீளப் புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது.

ஆலயம் பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன், ஆலயத்திற்கு அண்மையில் ஒரு கிணறும் காணப்படுகின்றது. சமாயத்து சுவாமிகளால் ஆலயத்தின் வளர்ச்சிக்கு என்று வழங்கப்பட்ட வயல் நிலங்களும் காணப்படுகின்றது. ஆலயத்தை மீளப்புனரமைக்கும் செயற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்படாமல் ஆலயம் பாழடைந்து காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.