நிறுவனம்:செல்லப்பிள்ளையார் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லப்பிள்ளையார் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் பன் மதவாச்சி
முகவரி செல்லப்பிள்ளையார் ஆலயம், பன் மதவாச்சி, திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருக்கோணமலையின் பன் மதவாச்சி கிராமத்தில் மிக நீண்ட கால வரலாற்றைக் கொண்ட ஒரு ஆலயம் செல்லப்பிள்ளையார் ஆலயம் ஆகும். இந்த ஆலயம் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட நல்லகுட்டியாறு எல்லைக்காளி அம்மன் ஆலயத்துடன் தொடர்பில் காணப்பட்ட ஒரு ஆலயமாகும். பன் மதவாச்சி குளக்கட்டில் இந்தப் பிள்ளையாரின் வழிபாடு காணப்பட்டுள்ளது. அடிக்கடி இந்தப் பிள்ளையார் காணாமல் போவதால் "செல்லப்பிள்ளையார்" என்ற பெயரை பெற்றார். குறித்த பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் மற்றும் அந்தப் பாதையினால் பயணம் செய்த மக்களால் நீண்ட காலமாக இந்த ஆலயம் ஆதரிக்கப்பட்டு வந்துள்ளது. 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர், இந்த ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டது. பின்னர் 2010ல் குறித்த கிராம மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட போது, மக்கள் ஒன்றிணைந்து, முன்னர் ஆலயம் இருந்த இடத்திற்கு சற்று தள்ளி வீதி ஓரத்தில் வயல்வெளிகளுக்கு மத்தியில், ஆலயத்தை மீண்டும் அமைத்தனர். 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆலயம் மீள அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த ஆலயத்திற்கேன நிர்வாக சபை அமைக்கப்பட்டு, நிர்வாக சபையின் தலைவியாக வாஞ்சிநாதன் ராஜலட்சுமி அவர்கள் செயல்பட்டு வருகின்றார். இந்த ஆலயம் ஆகம முறைப்படி அமைக்கப்படவில்லை. ஆலயத்தின் பின்னால் புளியமரம் ஒன்று காணப்பட்டு தற்சமயம் பட்டு போய் உள்ளது. அந்தப் புளிய மரத்தில் இத்தி மரம் ஒன்று வளர்ந்து உள்ளது. அந்த மரத்தின் கீழ் நல்லகுட்டியாறு எல்லை காளியம்மனின் நினைவாக அம்மன் விக்கிரகம் ஒன்று வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். 2020 ஆம் ஆண்டின் பின் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் சங்காபிஷேகம் இடம்பெற்று வழிபாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.