நிறுவனம்:திருக்கோணமலை மக்கெய்சர் மைதானம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருக்கோணமலை மக்கெய்சர் மைதானம்
வகை மைதானம்
நாடு இலங்கை
மாவட்டம் திருக்கோணமலை
ஊர் திருக்கோணமலை நகரம்
முகவரி மக்கெய்சர் மைதானம், திருக்கோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

திருக்கோணமலை மக்கெய்சர் மைதானம் திருக்கோணமலை மாவட்டம் மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தின் ஒரு முக்கிய மைதானமாக காணப்படுவது திருகோணமலை மகெய்சர் மைதானம். இது இலங்கையின் 115 முக்கிய மைதானங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இந்த மைதானம் 1956 ஆம் ஆண்டு ஆசிய நிதியின் கீழ் திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த அன்டன் மகெய்சர் என்பவரால் அமைக்கப்பட்டது.

இந்த மைதானத்தின் பராமரிப்பு வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் பல்வேறுபட்ட போராட்டங்களுக்கு மத்தியில் 1998 ஆம் ஆண்டு அப்போதைய நகர பிதா திரு. சூரியமூர்த்தி அவர்களின் முயற்சியாலும் திருக்கோணமலை நகர சபையின் கீழ் கொண்டுவரப்பட்டு, இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சிக்கு உட்பட்ட திருக்கோணமலை நகர சபையின் கீழ் உள்ளது. பலமுறை குறித்த மைதானத்தை மத்திய அரசுக்கு கீழ் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நகர சபை உறுப்பினர்களால் முறியடிக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2014 ஆம் ஆண்டு இதைவிட பெரிதாக கட்டித் தருகிறோம் எனக் கூறி குறித்த மைதானம் உடைக்கப்பட்ட போதிலும், இன்றுவரை மீள அமைக்கப்படாமல் பாழடைந்து உள்ளது. 2014.02.12ஆம் திகதி குறித்த பணிகளுக்காக கிணறு தோண்டும் போது, மைதான பகுதியில் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்றது. அதனை தொடர்ந்து திருக்கோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி டி. சரவணராஜா அவர்களால் வழக்கு விசாரிக்கப்பட்டதுடன், புனரமைப்பு பணிகள் இடை நிறுத்தப்பட்டன. எனினும் இன்று வரை பணிகள் இன்னும் மீள ஆரம்பிக்கப்படாமல் உள்ளது.

பலமுறை அரசாங்கம் குறித்த மைதானத்தின் பணிகள் மீள ஆரம்பிப்பதாக கூறப்பட்ட போதிலும், இதுவரை புனரமைப்பு பணிகள் ஒழுங்கான முறையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கோணமலை நகரப் பகுதியில் காணப்படும் பாரிய அளவிலான நிலப்பகுதி ஒன்று எந்தவித ஒழுங்கான உபயோகத்துக்கு உட்படுத்தப்படாமல் வீணாகக் கிடப்பது கவலைக்குரிய விடயம்.