நிறுவனம்:தி/ குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தி/ குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் குச்சவெளி
முகவரி தி/ குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயம், குச்சவெளி, திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

குச்சவெளியானது மெதடிஸ்த மிஷனால் கல்விப் பணி ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரிய கிராமங்களுள் தெரியவில்லையாயினும் நிலாவெளி, திரியாய், கும்புறுப்பிட்டி ஆகிய கிராமங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியைப் பார்க்கும்போது குச்சவெளி பாடசாலையும் 19ம் நூற்றாண்டின், அதாவது 1800 களின் இறுதிப் பகுதியில் நிறுவப்பட்டிருக்கலாம் எனக் கருதலாம்.

கடந்த சில ஆண்டுகளாக தி/ குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மகாவித்தியாலயம் என்ற பெயருடன் ஆரம்பப் பிரிவு ஒரு இடத்திலும், இடைநிலைப் பிரிவு வேறிடத்திலுமாக இயங்கி வந்த இப்பாடசாலை தற்போது 1000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதையடுத்து ஆரம்பப்பிரிவு தனியானதொரு பாடசாலையாக்கப்பட்டுள்ளது. ஆரம்பப் பிரிவு இயங்குகின்ற இடமே மெதடிஸ்த மிஷன் பாடசாலை நிறுவப்பட்ட இடமாகும். அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரும் "தி/ குச்சவெளி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை" என்ற பெயருடனேயே இயங்கி வந்துள்ளது. இப்பாடசாலை 2004ம் ஆண்டு சுனாமித் தாக்கத்திற்குள்ளான போது பெருமளவான பழைய ஆவணங்கள் அழிவடைந்தமையினால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு பற்றிய திருத்தமான தகவல்களும் கிடைக்கக் கூடியதாக இல்லை.

சுனாமி புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பிரதான வீதியில் புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 18.11.2007 இல் பாடசாலை புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. எனினும் ஆரம்பப் பிரிவு இன்னமும் முன்பிருந்த இடத்திலேயே புதிய பாடசாலையாக இயங்குகிறது.

துரித அபிவிருத்தி கண்டு வரும் இப்பாடசாலையின் முக்கியமான வளர்ச்சிக் கட்டம் 1 C தரப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டமையாகும். 2011 இல் இடம் பெற்ற தரமுயர்வைத் தொடர்ந்து க.பொ.த (உத) கலைப்பிரிவில் மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர். தற்போதுள்ள மாணவர் எண்ணிக்கை அண்ணளவாக 800. இப்பாடசாலை 2014ம் ஆண்டிலிருந்து 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுத் தொடர்ந்தும் வளர்ச்சி கண்டுவருகின்றது என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

கிடைக்கக் கூடியதாகவுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த காலங்களில் இப்பாடசாலையில் பணியாற்றிய அதிபர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

01. திரு. கே. பொன்னுத்துரை 02. திரு. எஸ்.நடராசா 03. திரு. ரீ. கந்தையா 04. திரு. ஏ. மொகமட் 05. திரு. எம்.ரீ. சுபடீள் 06. திரு. எம். சி. எம். ஹசன் 07. திரு. ரீ. அக்பர் 08. திரு. எம். எம். மொஹிதீன் 09. திரு. அகமட் லெப்பை 10. திரு. ஆர். எம்.தாஹா 11. திரு. எம். சின்னலெப்பை 12. திரு. ஜே. குலாம் மொஹிதீன் 13. திரு. எஸ்.ஏ. அனீஸ் 14. திரு. ஏ. ஏ. அகமட் லெப்பை 15. திரு. என். எம். செயட் அகமட் 16. திரு. ஜெகுப் ஆர்தீன் 17. திரு. எம் எஸ் ஏ. காதர் 18. திரு. ஏ. ஆரிப் 19. திரு. எம். ஏ. சலாகுதீன் 20. திரு. ஜே. எம். ஏ. ஜௌபர் 21. திரு. ஏ. எப். அப்துல் சலாம் 22. திரு. எம். ஐ. சஜீபு