நிறுவனம்:மட்/ மண்டூர் கந்தசுவாமி கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மட்/ மண்டூர் கந்தசுவாமி கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு
ஊர் மண்டூர்
முகவரி மண்டூர், மட்டக்களப்பு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மண்டூர் கந்தசுவாமி கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 20 மைல்கள் தூரத்தில் மண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த முருகன் கோவில். இது தில்லை மண்டூர் அல்லது சின்னக் கதிர்காமம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகின்றது.

கதிர்காமம், மற்றும் மண்டூர் ஆலயங்கள் கந்தன் படை­யெ­டுப்­புடன் சம்­பந்­தப்­பட்­டவை என்று கொள்­ளப்­ப­டு­கின்­றன. கந்தன் படையெ­டுப்பு இராமாயணப் போருக்கு முற்­பட்­டது எனவும் (கி.மு. 1800 இற்கு முற்­பட்­டது) எனவும் கொள்­ளப்­ப­டு­கின்­றது. சூரபத்மனை சங்­காரம் செய்த வேலா­னது உக்­கிரம் தாங்க முடி­யாமல் கடலில் மூழ்கி மூன்று கிளையானது என்றும் அதில் ஒரு கிளையே மண்­டூரில் தில்லை மரத்தில் பதிந்து திருத்­த­ல­மா­னது என்றும் மட்­டக்­க­ளப்பு தமி­ழகம், மட்டக்களப்பு மான்மியம் ஆகிய நூல்கள் கூறு­கின்­றன.

இக்கோவில் 1215-1248 காலப்பகுதியில் கட்டப்பட்டது. கோவில் அமைப்பு கதிர்காமம் போன்று அமைந்துள்ளது. வெளி முற்றத்தில் இரண்டு சிறிய கோயில்கள் உள்ளன. ஒன்று தெய்வயானைக்கும் மற்றையது வள்ளிக்கும் ஆகும். பிள்ளையார், மற்றும் நாகதம்பிரானுக்கும் கோயில்கள் உள்ளன. இங்குள்ள வழிபாட்டு முறைகள் பண்டைய மற்றும் கதிர்காமத்தை ஒத்து உள்ளன. தீர்த்­தத்தின் போது புட்பக விமானம் ஆல­யத்­தி­லி­ருந்து புறப்­பட்டு மட்டக்களப்பு வாவிக்­ க­ரையில் உள்ள சபா மண்­ட­பத்தை சென்­ற­டையும். கப்­பு­கனார் அதனுள் இருக்கும் பொருளை மட்­டக்­க­ளப்பு வாவியில் சீலையால் மறைக்­கப்­பட்­டி­ருக்கும் பந்தருள் எடுத்துச் சென்று தீர்த்தம் ஆடுவார்.

மண்­டூரில் பண்­டைய காலத்தில் கதிர்­காமம் போன்று தீ மிதிப்பும் இடம்­பெற்­றுள்­ளதாக முத­லியார் எஸ். ஓ. கன­க­ரெத்­தினம் மட்டக்களப்பு பற்றி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. திரு­வி­ழாவை ஆரம்­பிப்­ப­தற்­கான முதல் நிகழ்­வாக மாலையில் வீதி­யுலா வரும் பாதை­களில் சாட்­டை­யடி வீரர்கள் சாட்டை அடிப்பார். வெளிச்சம் இல்­லாத காலத்தில் காட்டினுள் ஆலயம் இருந்­த­போது அரு­கி­லுள்ள மிரு­கங்­களை கலைப்­ப­தற்­காக சாட்டை அடிக்­கப்­பட்­டது. திருவிழாவின் போது மாலையில் ஆல­யத்தைச் சுற்றி சங்கு ஊதி, சேகண்டி அடிப்­பது வழக்­க­மாகும். கம்­பி­களில் சீலையைச் சுற்றி தேங்காய் எண்ணெயில் நனைத்து இங்கு இன்றும் ஒளியூட்டப்படுகின்றது.

வெளி இணைப்பு

மண்டூர் கந்தசுவாமி கோயில்