நிறுவனம்:யாழ்/ அளவெட்டி அழகொல்லை விநாயகர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அளவெட்டி அழகொல்லை விநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அளவெட்டி
முகவரி அழகொல்லை, அளவெட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அளவெட்டி அழகொல்லை விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார். குதிரைமுகம் நீங்க நகுலேசுவரப்பெருமானை வணங்கி நீங்கப்பெற்ற மாருதப்புரவீகவல்லி மாவிட்டபுரம் கோவிலுக்கு தெற்காக கட்டுவித்த ஏழு விநாயகர் ஆலயங்களில் ஒன்று இந்த அழகொல்லை விநாயகர் ஆலயம் என்று கர்ணபரம்பரைக்கதைகள் கூறுகின்றன. இவ் ஆலயத்தின் முதல் நாள் கட்டிய கட்டிடம் அடுத்தநாள் இடிந்து வீழ்ந்திருந்ததாகவும், விநாயகர் ஆச்சாரியாரின் கனவிற் தோன்றி இதன் அளவுப் பிரமாணத்தில் பிழை இருப்பதாகவும் ஓர் குறிப்பிட்ட இடத்தில் அளவு ஓலை இருக்கிறது அதன்படி ஆலயத்தை கட்டும்படியும் கூறினார். இவ் அளவு ஓலை என்பது மருவி காலப்போக்கில் அழகொல்லை என பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. 1845இல் இக்கோயில் நல்லதம்பி, ஆறுமுகம், விநாயகர் வீரகத்தி, சபாபதி ஐயர், சீனிவாசக ஐயர் ஆகியோரின் முயற்சியால் கல்லால் கட்டப்பட்டு ஓலையால் வேயப்பட்டது.