நிறுவனம்:யாழ்/ நவாலி சிந்தாமணி விநாயகர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ நவாலி சிந்தாமணி விநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் நவாலி
முகவரி நவாலி வடக்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சிந்தாமணி விநாயகப்பெருமான் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டம் நவாலியூரில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னரே கோயில் கொண்டெளுந்தருளி அருள்பாலித்து வருகின்றார். சிவாச்சாரியார் கணபதீஸ்வரக்குருக்கள் பாரத நாட்டுக்கு தீர்த்த யாத்திரை செய்தபோது ஒரு பிராமணப்பெரியார் விநாயகப்பெருமானின் சிலையைக்கொடுத்துப் பூசிக்குமாறு கூறினார். இவரது இளைய புதல்வர் விசுவநாதக்குருக்கள் ஆலயம் அமைத்து முன்னேஸ்வரக் குமாரசாமிக் குருக்களால் பிரதீட்சை செய்யப்பட்டது. இவ் விஸ்வநாதக்குருக்கள் சைவாபிமானிகளின் உதவியுடன் ஆலயத்தை எல்லாவகையிலும் வளரச் செய்து 1921ம் ஆண்டில் கும்பாவிஷேசம் செய்வித்தனர். 1950ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் ஐந்துமுக விநாயகப்பெருமானது திருவுருவத்தை முதன்முதலாக இலங்கையில் வண்ணை இராமகிருஸ்ண ஆசாரியைக் கொண்டமைத்து கும்பாவிஷேகம் செய்வித்தனர். விநாயக சஷ்டிவரை 21 நாட்களும் 5 சிவாச்சாரியர்களைக் கொண்டு வருடந்தோறும் இலட்சார்ச்சனை நிகழ்வித்து வந்தனர்.