நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு வல்லன் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு வல்லன் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 9ஆம் வட்டாரம், வல்லன், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


வல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் என வழங்கும் அருள்மிகு ஶ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் புங்குடுதீவு, வல்லன் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

வள்ளியம்மை நாச்சியார் என்னும் பெண் மடத்துவெளியில் ஒருவரைத் திருமணம் முடித்து மூன்று நாட்களுடன் மணவாழ்க்கையில் இருந்து விடுபட்டுத் தனது கிராமத்திற்கு வந்ததாகவும், வழியில் நந்தவனத்தின் ஒரு பகுதியில் கொட்டில் அமைத்து தமது குலதெய்வமான வைரவரையும் நாச்சிமாரையும் வைத்து விளக்கேற்றி வழிபட்டதாகவும் காலப்போக்கில் தமது 91ஆவது வயதில் கார்த்திகை தினத்தன்று இவர் சமாதி அடைந்ததாகவும், இவர் இருந்த இடத்தில் வள்ளியாரைச் சமாதி வைத்து சுண்ணாம்புக்கற்களால் மண்டபம் அமைத்து ஒன்றரை அடி நீள அகலமுள்ள கற்பீடம் அமைத்து இதன் மேல் நாச்சிமாரை வைத்து வழிபட்டதாகவும் இக் கோவில் வரலாறு கூறுகின்றது.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 104-105