நிறுவனம்:ஸ்ரீ கோணலிங்கப் பிள்ளையார் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸ்ரீ கோணலிங்கப் பிள்ளையார் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் கோணேசபுரி
முகவரி ஸ்ரீ கோணலிங்கப் பிள்ளையார் ஆலயம், கோணேசபுரி, திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

இந்த ஆலயமானது திருகோணமலையில் இருந்து நிலாவெளி செல்லும் வழியில், 7 Km தொலைவில், கோணேசபுரி கிராமத்தில் அமைந்துள்ளது. 1960ம் ஆண்டுக் காலப் பகுதியில் கோணேசபுரி கிராமத்தில் குடியேரிய மக்களால் விவசாய நடவடிக்கைகள் மேற்க்கொண்டிருந்த வேளையில் யானைகள் போன்ற மிருகங்களினால் பயிர்களுக்கும், மக்களின் குடியிருப்புகளுக்கும் சேதங்கள் பல விளைவிக்கப்பட்டன. அவ்வேளையில் கிராம வாசிகள் தங்கள் துயர்களை இறைவனுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் சிறிய ஓர் ஆலயம் அமைத்து வழிப்பட்டு வந்ததுடன், தங்கள் துயர்களையும் அவ்வாலயத்தில் குடிகொண்ட இறைவனிடம் தெரிவித்தனர். இவ்வாறு மக்களால் நம்பிக்கையாக இந்த ஆலயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

1970ம் ஆண்டு காலப்பகுதியில் வல்லிபுரம் என்பவரால் ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்ததுடன், அதன் பின்னர் 2004ம் ஆண்டு குறித்த ஆலயத்தின் புனருத்தாரண பணிகள் ஆரம்பமாகி உள்ளன. 2007ம் ஆண்டு முதல் சிறந்த முறையில் நிர்வாக சபைகள் அமைக்கப்பட்டு, ஆலயம் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. 2007.11.13 அன்று புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். அதன் பிரகாரம் தலைவராக திரு. க. சிவலிங்கம் அவர்களும், செயலாளராக திரு. ச. நாராயனமூர்த்தி அவர்களும், உள்ளிட்ட நிர்வாக சபை ஆலயத்தை பரிபாலனம் செய்து வந்தது. 2010.10. 25 அன்று புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்ட வேளையில் தலைவராக திரு. பா. கேந்திரராஜா அவர்களும், செயலாளராக திரு. பொ. ஜெயக்குமார் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். பின்னர் 2012.03.15ம் திகதி அன்று தலைவராக திருமதி. எஸ். வினோஜினி அவர்களும் தெரிவு செய்யப்பட்டார். 2013.09.25 அன்று புதியதொரு நிர்வாக சபை அமைக்கப்பட்ட வேளையில் திரு. க. நித்தியகுமார் அவர்கள் தலைவராக தெரிவு செய்யப்பட, திருமதி. ஸ்ரீ . கிரிஜா அவர்கள் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர், ஆலயமானது 2013 .12 .12 அன்று தெரிவு செய்யப்பட்ட தலைவர் திரு. பொ. செல்வநாயினர் மற்றும் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட திரு. த. குலராசா அவர்கள் உள்ளிட்ட நிருவாக சபையினால் இவ்வாயைமானது பரிவாலனம் செய்யப்பட்டு வருகின்றது. 2011ம் ஆண்டு தொடக்கம் இவ்வாலயத்தின் பூஜைகள், அனுஷ்டானங்கள் மற்றும் கிரிஜைகளை பூசகராகிய திரு. செ. மாணிக்கராஜா ஐயா அவர்கள் மேற்கொண்டு வருகின்றார். ஆலயத்தில் வழிபடும் தெய்வங்களாக ஸ்ரீ கோணலிங்கப் பிள்ளையார் (சிலை), கோணலிங்கேஸ்வரர் (சிலை), கோணலிங்க நாக கன்னி, வீரபத்திரர், நாகராசா (நாக சிலை உருவம்), கோணலிங்க வைரவர் (சூலம்), ஸ்ரீ பத்திரகாளி உள்ளன.

இந்த ஆலயம் தற்பொழுது கிராம மக்களின் ஆதரவுடன், சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.