பகுப்பு:படிகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'படிகள்' இதழானது அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழுவினரின் வெளியீடாகும். இதழின் வெளியீடு 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இரு மாத இதழாக வெளியிடப்பட்டது. இதழின் பிரதம ஆசிரியர் திரு.எல்.வஸீம் அக்ரம்.


இவ் இதழ் அநுராதபுர மாவட்ட வளரிளம் படைப்பாளிகளுக்கு களமாய் அமைந்துள்ள இலக்கிய இதழாகும். இதழின் உள்ளடக்கமானது கவிதைகள், சிறுகதைகள், இலக்கிய கட்டுரைகள், விமர்சனங்கள், இலக்கியம் மற்றும் சினிமாத்துறை சார்ந்தோரது நேர்காணல்கள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இவ் இதழானது பாடசாலை மாணவர்களின் ஆக்கங்களிற்கு தனியான இடத்தை வழங்கி அவர்களின் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கின்றது. ISSN:1800-4598

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:படிகள்&oldid=405617" இருந்து மீள்விக்கப்பட்டது