"ஆளுமை:விஜயரட்ணம், வைத்தியலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=விஜயரட்ணம் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

23:40, 12 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் விஜயரட்ணம் வைத்தியலிங்கம்
தந்தை வைத்தியலிங்கம்
தாய் கதிராசிப்பிள்ளை
பிறப்பு
ஊர் வேலணை
வகை அரசியல் தலைவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெரியவர் என்று பலராலும் அறியப்படும் வைத்தியலிங்கம் விஜயரட்ணம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கில கல்வி பெற்று லண்டன் மற்றிக்குலேஷன் பரீட்சையில் விஷேட சித்தியும் பெற்றார். ஆனால் இளம் வயதில் தனது தந்தையாரை இழந்த காரணத்தினால் இவரால் உயர் கல்விக்கு செல்ல முடியவில்லை. இதனால் தொழில் வாய்ப்பு அதிகம் இருந்த கோலாம்பூர் சென்று தொழில்நுட்ப உதவியாளனாக இருந்த இவர் தனது புத்திக் கூர்மையினாலும், தொழில் திறமையினாலும் Clerk of Works, F.M.S.Railways போன்ற பதவிகளைப் பெற்றார். அதுமட்டுமல்லாமல் யாழ்ப்பாண தீவுப் பகுதிகளில் 700 பேருக்கு மேல் மலாயாவிலும், சிங்கப்பூரிலும் தொழில் வாய்ப்பு அளித்ததோடு மலாயாவில் விவேகானந்தா சபையை தாபித்து அதற்கு தலமை தாங்கி சேவை புரிந்தார். மேலும் தனது சொந்த காணியையே கொடுத்து சரஸ்வதி வித்தியாசாலை, மற்றும் வேலணையில் மருத்துவமனை என்பவற்றை கட்டுவித்து பல சமூக சேவைகளையும் செய்து வந்தார். 1931ஆம் ஆண்டு டொனமூர் யாப்பின் படி பண்டாரநாயக்கவினால் உள்ளூராட்சி சட்டம் கொண்டுவரப்பட்டு வேலணை, சரவணை, நாரந்தணை, கரம்பொன் உட்படுத்திய வேலணை கிராமச் சங்கம் அமைக்கப்பட இச் சபைக்கு முதல் தலைவராக தொடர்ந்து இரு தடவைக்கு மேல் இருந்து வேலணைக்கு சிறந்த சேவையாற்றினார் என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 507-509

வெளி இணைப்புக்கள்