"ஆளுமை:சரவணபவக்குருக்கள், சு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சரவணபவக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:35, 3 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சரவணபவக்குருக்கள், சு.
பிறப்பு 1864
ஊர் காரைநகர்
வகை சமயப் பெரியோர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

1864ம் ஆண்டு ஆனி மாசத்தில் பிறந்த சரவணபவக்குருக்கள் காரைநகரிலிருந்த கார்த்திகேயப் புலவரிடத்திலும், வடலியடைப்பிலிருந்த வேலுப்பிள்ளை உபாத்தியாரிடமும் கல்வி கற்றார். இவர் வியாவில் ஐயானார் கோவிலிலும், ஈழத்துச் சிதம்பரம் என வழங்கும் சிவன் கோவிலிலும் பூசகராகக் கடமையாற்றினார்.

இந்தியா சென்று ஆசாரியாபிஷேகம் பெற்ற பின்பு சிவன் கோவிலில் துவஜாரோகணம் முதலிய நைமித்திகக் கிரியைகள் இவராலே செய்யப்பெற்றன. அத்தோடு ஈழத்துச் சிதம்பரம் ஐயனார் கோயில் புனராவர்தன கும்பாபிஷேகமும் இவராலேயே செய்யப்பெற்றது. இவர் புராண படனத்தினும் சிறந்து விளங்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 283-284