"நிறுவனம்:யாழ்/ வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:22, 17 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயம் |
வகை | கிறிஸ்தவ தேவாலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வேலணை |
முகவரி | சாட்டி, வேலணை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
சாட்டி சிந்தாத்திரை மாதாவின் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது. கடலில் அல்லலுறும் மாலுமிகளையும், மீனவர்களையும் கடற்பயணிகளயும் ஆபத்தில் காத்து இரட்சித்து சிந்தா யாத்திரைக்கு துணை செய்யும் இந்த அன்னையை மக்கள் சிந்தாத்திரை மாதா என வாயார போற்றி வந்திருக்கின்றனர்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன சாட்டிக் கோட்டையில் தேவதாயாரின் திருச்சுரூபம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், இடும்பன் குடும்பத்தைச் சேர்ந்த மூத்தவி என்ற கத்தோலிக்க விசுவாம் நிறைந்தவர் சாட்டி மாதாவை பிரமபல்யமாக்கினார் என்றும் ஆலய வரலாறு கூறுகின்றது. 1789ஆம் ஆண்டு தேவ தாயாருக்கு கல்லால் ஒரு சிறிய ஆலயத்தை அமைத்தனர். அந்த ஆலயம் 1886ஆம் ஆண்டு எரிந்து போனமையால் 1928ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகி இன்று பேராலயமாக உருவெடுத்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 109-112