"ஆளுமை:பாக்கியராசா, கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பாக்கியராச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:29, 19 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பாக்கியராசா, கணபதிப்பிள்ளை |
தந்தை | கணபதிப்பிள்ளை |
தாய் | கண்ணகை |
பிறப்பு | 1951.09.08 |
ஊர் | அக்கரைப்பற்று |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அக்கரைப் பாக்கியன் எனும் புனைபெயர் கொண்ட க. பாக்கியராசா கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றில் கணபதிப்பிள்ளை, கண்ணகை தம்பதியரின் மகனாக 1951 செப்டெம்பர், 08ல் பிறந்தார். இவர் அக்கரைப்பற்று இ. கி. மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார்.
இவரால் உருவாக்கப்பட்ட அக்கறை, பலாக்கனி ஆகிய கவிதை நூல்களை வெளியிட்ட இவர் இரணியன் வரை, கண்ணன் கருணை, போடியார் பொன்னம்பலம் ஆகிய வடமோடிக் கூத்துக்களையும், நிம்மதி, புதுப்பெண்டாட்டி, நெஞ்சில் மூண்ட நெருப்பு, பாசத் துடிப்பு, வாழ்வின் ரகசியம், உறவைத் தேடி, பழகத் தெரிந்த மனமே, அன்னையின் அருள் ஆகிய நாடகங்களையும் தயாரித்துள்ளார்.
இலங்கை வானொலியில் இவரது மெல்லிசைப் பாடல்கள் ஒலிபரப்பாகியுள்ளது. இவர் இலக்கிய படைப்பு சார் அமைப்புக்களிலும், சமூக, சமய அமைப்புக்களிலும் பணி செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 126-127