"நிறுவனம்:யாழ்/ கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

23:06, 24 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் கீரிமலை
முகவரி கீரிமலை, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் கீரிமலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. கீரிமலைச் சூழலில் சைவப் பாடசாலை இல்லாத குறையைப் போக்க வ.கந்தையா அவர்களும், சு.கனகசபை அவர்களும் சைவ வித்தியாவிபிருத்திச் சங்க ஆலோசனையுடன் இப் பாடசாலையை அமைத்தனர். 1955ஆம் ஆண்டு யூலை 29ஆம் திகதி முதல் வ.கந்தையா அவர்கள் இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார்.

இவர்களது முழுமையான உழைப்புக் காரணமாக 1955ஆம் ஆண்டு யூலை மாதம் முதலாம் திகதி கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயம் என்ற பெயரில் இப் பாடசாலை பதிவு பெற்றது. க.பொ.த.சாதாரணதர வகுப்பும் இவ் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் சைவ வித்தியாவிபிருத்திச் சங்க முகாமையில் இயங்கிய இவ் வித்தியாலயம் 31.12.1962ஆம் ஆண்டு அரசியலரின் நேரடி பரிபாலணத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இப் பாடசாலை 01.07.1965இல் பத்தாவது ஆண்டு நிறைவு விழாக் கண்டதோடு 29-06-1969இல் கதம்ப விழாவையும் கொண்டாடியது. 1990இல் இடம்பெற்ற போர்ச்சூழலைத் தொடர்ந்து பாடசாலை அசையும் சொத்துக்களுடன் இடம்பெயரத் தொடங்கி பின்னர் 02-01-2012 அன்று கீரிமலையில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 115-116

வெளி இணைப்புக்கள்