"ஆளுமை:இராசரத்தினம், சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இராசரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:23, 23 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராசரத்தினம், சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1934.08.29
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு.இராசரத்தினம் (1934.08.29 - ) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த சிற்பக்கலைஞர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் ஆரம்பக் கல்வியை திருநெல்வேலி இந்து தமிழ்க் கலவன் படசாலையிலும், இடை நிலைக் கல்வியை செங்குத்தா இந்துக் கல்லூரியிலும், பரமேஸ்வரா இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.

1972ஆம் ஆண்டிலிருந்து கலாகேசரி கலாலயத்திலும் சிற்பக் கலைத் தொழிலை மேற்கொண்டு வந்தார். மேலும் 1984ஆம் ஆண்டு தாம் சுயமாக செயற்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு விநயாகர் சிற்பாலயம் என்னும் தொழிற்கூடமொன்றை திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவிலடியில் நிறுவினார். இதன் மூலம் மஞ்சங்கள், சப்பை ரதங்கள், கைலாய வாகனகள், உற்சவ மூர்த்திகளைக்காவும் வாகனங்கள், சித்திரத்தேர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பக் கலை வடிவங்களை உருவாக்கிச் சிறப்புற்று விளங்கினார்.

சிற்ப ஜோதி, தெய்வீக சிற்பவாரி, இந்திர ஜராவத சிற்ப பிரம்ம மாணிக்கம், சிற்பகலாபூபதி, சிற்ப கலவித்தகர், கலைஞானகேசரி, கலாபூஷணம் போன்றன இவருக்கு வழங்கப்பட்ட பட்டங்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 202