"ஆளுமை:அந்தோனிமுத்து, அடைக்கலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=அந்தோனிமுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:17, 11 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அந்தோனிமுத்து, அடைக்கலம் |
தந்தை | அடைக்கலம் |
தாய் | லூர்தம்மா |
பிறப்பு | 1940.08.19 |
ஊர் | மன்னார் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அ. அந்தோனிமுத்து (1940.08.19 - ) மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அடைக்கலம்; தாய் லூர்தம்மா. இவர் சிறு வயது முதல் தந்தை வழியில் நாட்டுக் கூத்து கலையில் ஈடுபாடு மிக்கவராக விளங்கினார். தனது 18 ஆவது வயதில் தொண்டர் அடிப்படையில் ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் 1962இல் அரசாங்க ஆசிரியராக நியமனம் பெற்று 1996இல் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்று 1968ஆம் ஆண்டில் பயிற்சி பெற்ற ஆசிரியராக வெளியேறினார்.
நுவரெலியாவில் உள்ள பரிசுத்த திரித்துவக் கல்லூரியிலும், பின்னர் மன்னார் மாவட்டத்தின் தேவன்பிட்டி, விடத்தல் தீவு, பெரியமடு, தட்சணாமருதமடு ஆகிய இடங்களில் உதவி ஆசிரியராக கடமையாற்றினார். பின்னர்1975ஆம் ஆண்டு அதிபர் பரீட்சையில் சித்தியடைந்து அதிபராக பதவி உயர்வு பெற்றார். மேலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பள்ளிக் கல்வி திட்ட சிறப்பு சான்றிதழை 1983இல் பெற்றுக் கொண்ட இவர் ஆசிரிய ஆலோசகர், மாவட்ட இணைப்பாளர் போன்ற பதவிகளை வகித்தார். இவர் மன்னார் அமுது என்ற பெயரில் பல ஆக்கங்களை எழுதியுள்ளதோடு 1988ஆம் ஆண்டு பாலர் கவிதைகள் ஐம்பது என்னு சிறுவர் பாடநூலையும் எழுதியுள்ளார்.
இவருடைய சேவைக்காக 2007ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது இவருக்கு கிடைத்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 13943 பக்கங்கள் 142-145