"ஆளுமை:ஜனாப் சமீம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜனாப் சமீம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:18, 16 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜனாப் சமீம்
பிறப்பு
ஊர்
வகை பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜனாப் சமீம் ஓர் பேச்சாளர். பிரதம கல்வி அதிகாரியக பணியாற்றிய இவருக்கு கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு கிடைத்தது. சங்கீதமோ விஞ்ஞானமோ எந்த விடயத்தையும் மக்களுக்கு விளக்கிப் பேசும் திறன்மிக்க இவர் கிழக்கு பிராந்திய கல்விப் பிராந்தியத்தில் கல்விப் பணிப்பாளராக இருக்கும் போதுதான் இரு தடவைகள் பாடசாலைகளின் அகில இலங்கை தமிழ்த் தின விழா மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் அரசாங்க முத்திரையுடன் நடந்தது.

பட்டதாரி ஆசிரியராக தமது பணியை ஆரம்பித்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே வட்டாரக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி ஆலோசகர், பிரதம கல்வி அதிகாரி முதலிய பதவிகளை வகித்து கல்விப் பணிப்பாளராக உயர்ச்சிப் பெற்றது இவரது கடின உழைப்பை எடுத்துக்காட்டுகின்றது. பல சிறுகதைகளை எழுதியுள்ள இவர் இலங்கை முஸ்லீம்களின் திருமறைச் சம்பிரதாயங்கள், வரலாறு கண்ட முஸ்லீம் பெரியார்கள், இலங்கை முஸ்லீம்களின் வரலாறு போன்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், மற்றும் பல இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மேலும் இவரால் எழுதப்பட்ட மதரசாக் கல்வி என்ற ஆய்வுக் கட்டுரை பாரிசிலுள்ள யுனெஸ்கோ ஸ்தாபனத்தின் நிரந்தர கட்டுரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 57-59
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜனாப்_சமீம்&oldid=166096" இருந்து மீள்விக்கப்பட்டது