"ஆளுமை:திருஞானசம்பந்தன், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சம்பந்தன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:16, 22 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சம்பந்தன் |
பிறப்பு | 1913.10.20 |
ஊர் | திருநெல்வேலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சம்பந்தன் (1913.10.20 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் கல்வி கற்று பின் ஆசிரியப் பணியில் ஈடுபட்டார்.
தனது இருபத்தைந்தாவது வயதில் எழுத்துலகில் தடம் பதித்த இவர் ஏறக்குறைய இருபது வரையான சிறுகதைகளை எழுதியுள்ளார். தாரபாய், விதி, புத்தரின் கண்கள், கூண்டுக்கிளி, தூமகேது, மகாலச்சுமி, மனித வாழ்க்கை, சபலம், மனிதன், சலனம், மதம், துறவு, ஆகியன இவரது சிறுகதைகளில் சிலவாகும். இவரது கதைகளை படிக்கும் போதே சுத்த மனத்துடன் கூடிய ஆத்ம பலத்தின் தவமே அவையெனக் கண்டு கொள்ளலாம். சிறுகதைகளில் காவியச்சுவையையும், கனத்தையும் கொண்டு வந்த பெருமை இவருக்குரியதாகும். பாசம் என்ற நவீன உஐநடை நாவலைப் புனைந்த இக் கவிஞர் ஆக்கிய கவிதை நூல் சாகுந்தல காவியம் ஆகும்.
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 17-20