"ஆளுமை:கார்த்திகேசு, கருப்பையாப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=கார்த்திகே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:26, 26 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | கார்த்திகேசு |
| தந்தை | கருப்பையாப்பிள்ளை |
| பிறப்பு | |
| ஊர் | மாத்தளை |
| வகை | கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கார்த்திகேசு, கருப்பையாப்பிள்ளை மாத்தளையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கருப்பையாப்பிள்ளை. கலையுலகில் பிறந்த மண்ணை தன் பெயருடன் இணைத்துக் கொண்டதால் மாத்தளை கார்த்திகேசு எனவும் இவர் அழைக்கப்பட்டார். மாத்தளை விஜய கல்லூரியிலும் கிறிஸ்தவக் கல்லூரியிலும் கல்வி பயின்ற இவர் 50களில் கிறிஸ்தவக் கல்லூரியின் மாணவனாக இருந்த நாட்களிலேயே கல்லூரியின் உப அதிபராக இருந்த திரு.செல்லத்துரை அவர்கள் மேடையேற்றிய ‘நலமே புரியின் நலமே விளையும்’ எனும் நாடகத்திலும், மாத்தளை புனித.தோமையார் கல்லூரி ஆசிரியர் ராஜரட்ணம் அவர்களின் ‘அன்பின் வெற்றி’ நாடகத்திலும் அவருடைய அடுத்த மேடை நாடகமான ‘இதுதான் முடிவு’ நாடகத்திலும் நடிக்கக் கிடைத்த வாய்ப்பின் மூலம் நாடகத்துறைக்குள் உள்வாங்கப்பட்டார்.
கவின் கலை மன்றத் தயாரிப்பான ‘பலே புரடியூசர்’ , ‘வெண்ணிலா’ போன்ற நாடகங்களில் நடிக்க வைத்து கொழும்பு வாழ் நாடக ரசிகர்களுக்கு இவரை அறிமுகப்படுத்திய பெருமை அமரர் ஜே.பி.ரொபட்டைச் சார்ந்ததாகும். 1971ல் இவர் எழுதிய ‘தீர்ப்பு’ என்னும் நாடகம் அந்தனி ஜீவாவின் இயக்கத்தில் பிரபல அரங்கியல் நெறியாளர் சுஹைர் ஹமீட் அவர்களால் மேடையேற்றப்பட்டது. 25க்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதித் தயாரித்துள்ளார். இவருடைய நாடகப் பிரதிகள் கொழும்பு பல்கலைக்கழகம், மொரட்டுவைப் பல்கலைக்கழகம், கொழும்பு ரோயல் கல்லூரி, சென்.ஜோசப் கல்லூரி, வெஸ்லி கல்லூரி, புனித அன்னம்மாள் பாடசாலை போன்ற பிரபல கல்லூரிகளின் தமிழ் விழாக்களில் மாணவர்களால் தயாரித்து மேடையேற்றப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக ஒரு அரங்கியல் கலைஞர் என்பதற்கு அடுத்ததாக தன்னுடைய ‘குறிஞ்சி’ப் பதிப்பகம் மூலமாக 16 இலக்கிய நூல்களை வெளியிட்டிருக்கின்றார் என்பது முக்கியமானது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 118-121