"ஆளுமை:துரைராஜா, கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=துரைராஜா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:29, 8 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் துரைராஜா
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1927.10.29
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைராஜா, கணபதிப்பிள்ளை (1927.10.29 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் 1959இல் வட இலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சங்கீத தராதரப் பத்திரம் பெற்று சித்தியடைந்துள்ளார். பின் இந்தியா சென்று அங்கு முடிகொண்டான் வெங்கட் இராமையாவிடமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கர்நாடக சங்கீதத்தினை 5 வருடங்கள் கற்று இசைமணி என்ற பட்டத்தையும் இவர் பெற்றுக் கொண்டார்.

1962இல் இலங்கை திரும்பி மாதனையில் தமிழிசை சங்கத்தினை ஏற்படுத்தி அதனூடாக 20 வருடங்கள் இசை விழாவினை நடத்துவந்துள்ளார். இவர் தனது 72ஆவது வயதிலும் கூட இசைக் கச்சேரியை நடத்தியமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். இந்தியாவில் கோபாலகிருஷ்ண பாரதியார் விழாவிலும், சிதம்பர நாவலர் பாடசாலையிலும், யாழ்ப்பாணத்தில் இரசிக ரஞ்சனி சபா இசை விழாவிலும் மேலும் பல இசை விழாக்களிலும் இவர் தனது இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 70-71