"ஆளுமை:மனோகரி, சற்குருநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மனோகரி சற்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:08, 8 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மனோகரி சற்குருநாதன் |
பிறப்பு | 1958.01.03 |
ஊர் | கோண்டாவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மனோகரி சற்குருநாதன் (1958.01.03 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். மா. ஶ்ரீரங்கநாதன், வி. வி. வைரமுத்து ஆகியோரிடம் இசைக் கலையைப் பயின்ற இவர் தனது பதின்மூன்றாவது வயதிலிருந்து இசைக்கலை ஆற்றி வருகின்றார்.
இவர் இசை நடிகராகவும், பாடல்கள் பாடுபவராகவும், திரைப்பட நடிகராகவும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியிறுக்கின்றார். இவர் பாடிய பாடல்கள் ஒலிப்பேழைகளாகவும், இறுவெட்டுக்களாகவும், வெளிவந்துள்ளன. மேலும் ஏழாலை களபாவோடை அம்மன் ஆலயத்திலும், இலங்கை வானொலி நாடக மேடைகளிலும், பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்திலும், தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும், வேறு பல இடங்களிலும் இவர் தனது இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 76