"ஆளுமை:அரியரெத்தினம், சந்தியாப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Meuriy பயனரால் ஆளுமை:அரியரெத்தினம்,ச. (வாகரைவாணன்), ஆளுமை:அரியரெத்தினம், சந்தியாப்பிள்ளை என்ற த...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
23:27, 6 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | அரியரெத்தினம் |
| தந்தை | சந்தியாப்பிள்ளை |
| தாய் | சந்தனம் |
| பிறப்பு | 1944.12.22 |
| ஊர் | வாகரை, மட்டக்களப்பு |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அரியரெத்தினம், ச. (1944.12.22 - ) மட்டக்களப்பு, வாகரையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சந்தியாப்பிள்ளை; தாய் சந்தனம். இவர் வாகரைவாணன் எனும் புனை பெயரால் அழைக்கப்பட்டார். வாகரை தமிழ் பாடசாலை, சென்மேரிஸ் பாடசாலை, சிவானந்தா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றவராவார். சுதந்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணியாற்றிய இவர் உதய சூரியன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
சுட்டபொன், பயணம், துரோணர் வதம், எண்ணத்தில் நீந்துகிறேன், தமிழ்ப் பாவை, கடற்கரைப் பூக்கள், இனிக்குந் தமிழ், கிறிஸ்தவ தத்துவம், விபுலனந்தம், அருள் அந்தோனியார், ஒரு பூ மலர்கிறது, பாலர் தமிழ்ப் பாட்டு, சின்ன சின்ன கதைகள், சின்ன சின்ன பூக்கள், சிறுகதை விமரிசனம், கிறிஸ்து காவியம் முதலான பல்வேறு படைப்புக்களை ஆக்கியுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழக விருதுகள், சாகித்திய இலக்கிய விருது என்பனவற்றை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 144