"ஆளுமை:இராசகோபால், இரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=இராசகோபால்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:04, 3 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இராசகோபால் |
தந்தை | இரத்தினம் |
பிறப்பு | 1938.03.03 |
ஊர் | பருத்தித்துறை |
வகை | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராசகோபால், இரத்தினம் (1938.03.03 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை இரத்தினம். மூ. பொன்னம்பலம், சிற்பி இராமையா ஆகியோரிடம் ஓவியக் கலையைப் பயின்ற இவர் பின் இந்தியாவிற்குச் சென்று கலை, சிற்பம், வர்ணம் தீட்டுதல் ஆகியவற்றைப் பயின்றார். மேலும் 1962இல் மாதனை கலை மன்றத்தின் நிரந்தர ஒப்பனைக் கலைஞராகவும் நடிகராகவும் இணைந்த இவர் சம்பூர்ண அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, கோவலன் கண்ணகி, பவளக்கொடி, அல்லி அர்ச்சுனா, ஸ்கந்தலீலா, ஶ்ரீவள்ளி ஆகிய நாடகங்களில் நடித்துள்ளதோடு தாசன் அன் எயிட்மென் என்னும் ஆங்கிலப்படத்தில் காட்சி அமைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். பாசவலை என்னும் நாடகமும் இவரால் எழுதி மேடையேற்றப்பட்டுள்ளது.
கலாகேசரி, சகலகலாவல்லவன், கலாபூஷணம், ஓவியகேசரி ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 259