"ஆளுமை:இந்திராணி, சண்முகலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இந்திராணி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

18:28, 22 பெப்ரவரி 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் இந்திராணி
தந்தை சூரி பொன்னையா
தாய் சின்னத்தங்கம்மா
பிறப்பு 1959.01.10
ஊர் முள்ளியவளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திராணி, சண்முகலிங்கம் முல்லைத்தீவு முள்ளியவளையில் பிறந்த கலைஞர். இவரது தந்தை அண்ணாவியார் கலைமாமணி சூரி பொன்னையா; தாய் சின்னத்தங்கம்மா. ஆரம்பக் கல்வியை முள்ளியவளை சைவப் பாடசாலையிலும் உயர் கல்வியை வித்தியானந்தா கல்லூரியிலும் கற்றார். சங்கீதக் கல்வியை இவரின் தந்தையிடமே ஆரம்பத்தில் கற்றார். முல்லைசகோதரிகள் என அழைக்கப்படுபவர்கள் இவரின் உடன் பிறந்த சகோதரிகளாவர். இவரின் சகோதரர் கலாபூசணம் பாலசுப்பிரமணியம் ஒரு மிருதங்க வித்துவான் ஆவர். முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றியபோது சங்கீத பூஷணம் சதாசிவம் அவர்களிடம் இசை கற்ற பின் சங்கீத பூஷணம் வே.ஜெயவீரசிங்கம் அவர்களிடம் முறையாக சங்கீதத்தை கற்றார்.

1979ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தில் வயலின் ”இசைக் கலைமாணி” பட்டம் பெற்றார். 1969ஆம் ஆண்டு வயலின் இசையை யாழ்ப்பாணம் பிரம்மஸ்ரீ சர்வேஸ்வர சர்மா அவர்களிடம் முறையாக பயின்றுள்ளார். பரத நாட்டியத்தை திருமதி சாந்தினி சிவனேசனிடமும் கிருசாந்தி ரவீந்திரனிடமும் முறையாகக் கற்றுள்ளார். வட இலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட ஆசிரியர் தர பரீட்சையில் சங்கீதம், வயலின், பரதம் ஆகிய கலைகளில் திறமைச் சித்தி பெற்றுள்ளார்.

1984ஆம் ஆண்டு இசை ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் 1997ஆம் ஆம் ஆண்டு இசை ஆசிரிய ஆலோசகராக துணுக்காய் கோட்டத்தில் பணியாற்றி 1999ஆம் ஆண்டு வவுனியா வடக்கு வலயத்தில் சங்கீதப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பல இசைக் கச்சேரிகளுக்கு வயலின் பக்கவாத்தியமாகவும் தனி (சோலோ) இசை நிகழ்ச்சியையும் வழங்கி வருகிறார்.

விருதுகள்

இசைக் கலைமணி

நுண்கலைமாணி

சங்கீத கலாவித்தகர்

பரத கலாவித்தகர்

குறிப்பு : மேற்படி பதிவு இந்திராணி, சண்முகலிங்கம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.