"ஆளுமை:அந்தோனிப்பிள்ளை, சந்தியா ஜோசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=அந்தோனிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:57, 26 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அந்தோனிப்பிள்ளை |
பிறப்பு | 1932.04.18 |
ஊர் | மணல்குடியிருப்பு, முல்லைத்தீவு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அந்தோனிப்பிள்ளை, சந்தியா ஜோசை (1932.04.18) முல்லைத்தீவு மாவட்டம் மணல்குடியிருப்பில் பிறந்த கலைஞர். சிறு வயது முதலே தமது கிராமத்து கூத்துக்களில் ஈடுபாடு கொண்டவர். இவரது தாய்வழிப் பேரன் ஒரு கூத்துக்கலைஞர்.
கூத்துக்களுக்குரிய உடுப்புக்கள், உபகரணங்கள் செய்யும் திறமை இயல்பிலே வாய்த்தது. இவரது சகோதரர் அருளப்பு ஒரு ஹார்மோனிய இசை வித்துவான். இதனால் இவர் இசையிலும் பாடல் பாடுவதிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
முல்லைத்தீவு கூத்தான கோவலன் கூத்துடன் இவரது ஈடுபாடு முக்கியமானது. பதின்மூன்று வயதில் இருந்து நடிப்பதிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஞானசவுந்திரி, கண்டியரசன் ஆகிய நாடகங்களில் நடித்ததோடு வில்லிசை குழுவில் இசை கலைஞராகவும் இவர் இருந்துள்ளார். கூத்து, நாடகங்களுக்கான உடுப்பு, ஒப்பனை என்பவற்றுடன் இசையமைத்தும் உள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 8564 பக்கங்கள் 85