"ஆளுமை:ராஜு, ந" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=ராஜு| தந்தை=|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
07:09, 7 ஆகத்து 2020 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | ராஜு |
| பிறப்பு | 1924.03.26 |
| இறப்பு | 2006.06.30 |
| ஊர் | மட்டக்களப்பு |
| வகை | கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
ராஜு, ந (1924.03.26) தமிழ்நாடு அபிராமம் கிராமத்தை சேர்ந்தவர் வசிப்பிடமாக இலங்கை மட்டக்களப்பை கொண்டவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று 1948ஆம் ஆண்டு சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். மாத்தளை பாக்கிய வித்தியாலயத்தில் இசை ஆசிரியராக கடமையாற்றினார். மட்டக்களப்பு தாமரைக்கேணியைச் சேர்ந்த தங்கத்திரவியம் என்பவரை திருமணம் செய்தார். மட்டக்களப்பில் ஆசிரியராக பணியாற்றியதுடன் மட்டக்களப்பில் நடைபெற்ற முக்கிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
1953ஆம் ஆண்டு மட்டக்களப்புத் தமிழ் கலாமன்றம் சிறப்பான தமிழ் விழா ஒன்றை நடாத்தியது இவ்விழாவுக்கு இந்தியாவிலிருந்து பல தமிழறிஞர்கள் வந்தனர். இந்நிகழ்ச்சி தொடர்பாக 1953ஆம் ஆண்டு வெளிவந்த கல்விப் பத்திரிகையில் சிறப்பான கட்டுரை ஒன்று வெளிவந்தது. இக்கட்டுரையில் ராஜுவின் இசை நிகழ்ச்சி பற்றி மிகச் சிறப்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. மட்டக்களப்பு கலாசாரப் பேரவை, தமிழ்க்கலாமன்றம், தமிழ்கலை மன்றம், தமிழ் எழுத்தாளர் சங்கம் போன்ற பல மன்றங்கள் நடத்திய விழாக்களிலும் ஆசிரியர் கலாசாலை, வின்சென்ட் மகளிர் கல்லூரி, மட்டக்களப்பு ஆனைப்பந்தி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்ற கலை விழாக்களில் இசை நிகழ்ச்சி வழங்கியதன் மூலம் பல கௌரவங்களையும் பெற்றார். கிழக்கிலங்கையில் மிகவும் பிரபலமாக இருந்த ராஜு 1958ஆம் ஆண்டு உரும்பிராய் சிதம்பர சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் இவரின் இசைக்கச்சேரி இடம்பெற்றது.
மனைவி இறந்த பின்னர் அமெரிக்காவில் உள்ள அவரது புதல்வர் அசோகனுடன் இருந்த இவர் 30.06.2006ஆம் ஆண்டு காலமானார்.
விருதுகள்
மட்டக்களப்பு சங்கீத சபா கந்தவர்கானன் என்ற பட்டம் வழங்கியது.
இசையரசு பட்டம் – மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம்.
பிரதேச இசைக்கலைஞர் – பிரதேச சாகித்திய விழாவில் 1993.
இசைக்கலைவாணர் – மட்டக்களப்பு மாவட்டக் கலாலயம்.
இசைப்பேரரசு – 1993ஆம் ஆண்டு தமிழகத்தில் மணிமேகலைப் பிரசுர நூல் வெளியீட்டு விழாவின் போது பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்.
கலாபூஷணம் பட்டம் இந்து சமய கலாசார திணைக்களம்.
வளங்கள்
- நூலக எண்: 1027 பக்கங்கள் 45-47