"ஆளுமை:இராமசாமி ஐயர், சுப்பிரமணியக் குருக்கள்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பெயர்=இராமசாமி ஐயர் | தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:18, 22 டிசம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

பெயர்=இராமசாமி ஐயர் | தந்தை=சுப்பிரமணியக் குருக்கள்| தாய்=யோகம்மா| பிறப்பு=1916 | இறப்பு= 1961| ஊர்= நல்லூர், யாழ்ப்பாணம், வகை= இடதுசாரி| புனைபெயர்=| }}


இராமசாமி ஐயர்,சுப்பிரமணியக் குருக்கள். (1916 - 1961) நல்லூர், யாழ்ப்பாணம். இவரது தந்தை சுப்பிரமணியக் குருக்கள். தாய் யோகம்மா. யாழ்ப்பாணம் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்றார். ஆரம்பக் கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர், லண்டன் மெர்ரிக்குலேசன் பரீட்சைக்காக திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் கற்றார்.

தமது குடும்பத்தைப் பராமரிக்கும் நிமித்தம் தனது படிப்பை நிறுத்திவிட்டு கோயில் பூசகராகக் கடமையாற்றத் தொடங்கிய ஆதே வேளை யாழ் புகையிரத நிலையத்தில் லலித விலாஸ் என்றொரு புத்தகசாலையையும் , கோயில்களில் நடக்கின்ற திருவிழாக்களின் நடமாடும் புத்தகசாலையையும் நடாத்தினார்.

1948இல் தோழர் இராமசாமி ஐயரும், நீர்வேலி எஸ்.கே.கந்தையாவும் இணைந்து கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் இணைந்து வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை தமிழாக்கம் செய்தனர். தான் வசித்த பிரதேசத்திலுள்ள ஒடுக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கு தனது வீட்டிலேயே இலவசமாக வகுப்புகளை நடத்தினார் தோழர் இராமசாமி ஐயர். இப்பிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இவரது செல்வாக்குப் பெருகியது. இப்பிரதேசத்தில், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த (நல்லூர்) அரசடிப் பகுதியில் வலுவான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்க கிளைகளை அமைத்தார். இதனால் அரசடி இராசையா, செல்வராசா, பொன்னுத்துரை போன்ற இறுக்கமான பல கட்சித் தோழர்கள் உருவாக காரணமாக அமைந்தார்.



வெளி இணைப்புக்கள்