"ஆளுமை:நாகலிங்கம், முருகையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்= நாகலிங்கம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:47, 2 மார்ச் 2023 இல் நிலவும் திருத்தம்

பெயர் நாகலிங்கம்
தந்தை முருகையா
பிறப்பு 1931.02.04
ஊர் ஏழாலை
வகை எழுத்துத்துறைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திரு.நாகலிங்கம் முருகையா ஏழமலையில்(1931.02.04) பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியினை யா/ஏழாலை சைவ மகாஜனா வித்தியாலயத்தில் கற்றார். இவர் திருமணத்தின் பின் முகமாலையில் வசித்து வருகின்றார். சைவ சமயத்தின் பணிகளை ஆத்மஜோதி கா.முத்தையா அவர்களுடன் இணைந்து தேவாரப் பண்ணிசை, திருமுறை ஓதுதல், திருமுறை தேவாரப் புத்தகங்களை வெளியிட்டும் பஜனைக்குழுக்களை உருவாக்கியும் முத்தையா அவர்களின் மறைவிற்குப்பின் அவரது அவரது பணியினை ஆற்றி வருகிறார். ஏழாலை சன்மார்க்க சபையின் தற்போதைய செயற்பாடுகள் இவரது வழிகாட்டலிலேயே இடம்பெற்று வருகின்றது. இவர் வரண்முறையான பண்ணிசை, கலாசாரம் பேணுவதிலும் தனது முழு உழைப்பையும் செலுத்தி பணி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் “கலைத்தென்றல்" விருதும், இயக்கச்சி மல்வில் கிருஷ்ணன் ஆலய நிர்வாகத்தினரால் “ஆத்மீக மாமணி" விருதும், இலங்கை உலக சைவத்திருச்சபையினரால் “திருமுறை வித்தகர்" விருதும், ஊரெழு உரும்பிராய் கலாசார மன்றத்தினால் வாழ்த்து மடலும் வழங்கிக்கௌரவிக்கப்பட்டதுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் “எழுத்துத்துறைக்கலைஞர்" விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.