"ஆளுமை:வரதன், நாகரெத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்= வரதன்| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:11, 7 சூன் 2023 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | வரதன் |
| தந்தை | நாகரெத்தினம் |
| தாய் | நல்லம்மா. |
| பிறப்பு | 1976.05.08 |
| ஊர் | சந்தோசபுரம், திருகோணமலை |
| வகை | சமூக சேவையாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
நாகரெத்தினம் வரதன் (1976.05.08) சந்தோசபுரம், திருகோணமலைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவரது தந்தை நாகரெத்தினம்; தாய் நல்லம்மா.இவரது மனைவி காளிகாமலர். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் தரம் எட்டு வரை கல்வி கற்றுள்ளார். தனது பூர்வகுடி சமூகம் சார்ந்த தேவைகளையும், தமக்கான உரிமை மீறல்களையும் நன்குணர்ந்து கொண்டு அதற்காக அமைப்பு ரீதியாக செயற்படும் ஒருவராகக் காணப்படுகிறார். அந்த வகையில் 2002-2010 வரை கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவராக இருந்துள்ளார். 2004 ஓர் அரச சார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து தனது சமூக உட்கட்டுமான வேலைகளைச் செய்துள்ளார். 1990 தொடக்கம் இன்று வரை விளையாட்டுக்கழகத் தலைவராகவும் மற்றும் மரண சங்கம், சமூர்த்தி சங்கம், கூட்டுறவு சங்கம் முதலானவற்றுள் அங்கத்துவம் வகித்து தனது சேவையினை செவ்வனே ஈடேற்றிக் கொண்டு வருகின்றார். அத்துடன் தனது சமூகத்தின் கருத்துக்களை இன்னும் வலுச்சேர்க்கும் வகையில் 2016.03.28 தொடக்கம் ‘குவேனி’ பழங்குடி மக்கள் நலன்புரி அமைப்பு “என்னும் அமைப்பை உருவாக்கி அதன் செயலாளராக இன்று வரை செயற்பட்டுக்கொண்டு வருகிறார்.