"ஆளுமை:இரத்தினராசா, கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர் = இரத்தினரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

01:40, 6 மார்ச் 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் இரத்தினராசா
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் புவனேஸ்வரி
பிறப்பு 1972.04.01
ஊர் வட்டவன்,வெருகல், திருகோணமலை
வகை வேடக்கப்புறாளை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கணபதிப்பிள்ளை இரத்தினராசா (1972.04.01) இவர் வாழைத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் வட்டவன் - வெருகல் - திருகோணமலையைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த பன்முக ஆளுமை கொண்ட வேடக்கப்புறாளை ஆவார். இவரது தந்தை கணபதிப்பிள்ளை; தாய் புவனேஸ்வரி. இவரது மனைவியின் பெயர் சந்திரகலா. இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது பாடசாலைக் கல்வியினை வெருகல் வாழிஅத்தோட்டம் தமிழ் வித்தியாலயத்தில் கற்றுள்ளார். இவர் தற்காலத்தில் காணப்படுகின்ற குறித்த பூர்வகுடிகளின் சமூகத்தின் வேடக்கப்புறாளையாகவும், வேடர் சமூகத்தினரிடையே தனித்துவமாகக் காணப்படுகின்ற உத்தியாக்கள் (முன்னோர்) வழிபாட்டின் நடைமுறைகள் நன்கறிந்த ஒருவராகவும் அதே சமயம் தமிழர் கிராமிய வழிபாடுகளை திறம்படச் செய்யக்கூடிய ஒருவராகவும் காணப்படுகின்றார்.