"நிறுவனம்:திரு/ மல்லிகைத்தீவு சித்திவிநாயகர் கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{நிறுவனம்| பெயர்=மல்லிகை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:53, 29 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | மல்லிகைத்தீவு சித்திவிநாயகர் கோவில் |
| வகை | இந்து ஆலயங்கள் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | திருகோணமலை |
| ஊர் | மல்லிகைத்தீவு, மூதூர் |
| முகவரி | மல்லிகைத்தீவு சித்திவிநாயகர் கோவில், மூதூர், திருகோணமலை |
| தொலைபேசி | - |
| மின்னஞ்சல் | - |
| வலைத்தளம் | - |
மல்லிகைத்தீவுச் சிவன் கோவிலிலிருந்து சிறிது தூரத்தில் சித்திவிநாயகர் ஆலயம் காணப்படுகின்றது. கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், தரிசன மண்டபங்களையுடையதாக இவ்வாலயம் கட்டப்பட்டிருக்கின்றது. கருவறையில் விநாயகர் ஸ்தாபிக்கப்பட்டுள்ளார். மகாமண்டபத்தில் மூஷிகம், பலிபீடம் வைக்கப்பட்டிருக்கின்றது. தென்னஞ் சோலைகளும், பச்சைப்பசேலென வயல்வெளிகளும் சூழ்ந்த அமைதியான இயற்கைச் சூழலில் இவ்வாலயம் இருக்கின்றது.
ஒரு நாளைக்கு மூன்று வேளை பூசை நடைபெற்று வருகின்றது. விநாயகசதுர்த்தி, பெருங் கதை, திருக்கார்த்திகை, தைப்பூச விழா என்பன நடை பெற்று வருகின்றது.
மல்லிகைத்தீவு தனித்தமிழ்ச் சைவக்கிராமம். பரம்பரை பரம்பரையாக மக்கள், பண்பாட்டையும், பண்டைய வழக்கங்களையும் பாதுகாத்து வருகின்றார்கள். நீலாப்பழை அயலிலுள்ள ஒரு கிராமம். அங்கு ஒரு பத்தினியம்மன் கோவில் இருக்கின்றது. அந்தக் கோவிலையும் மல்லிகைத்தீவு மக்கள் பராபரித்து வந்திருக்கின்றர்கள்.
இனக் கலவரங்களின் தாக்கம் இவ்வாலயத்தைப் பெரிதும் பாதித்திருக்கின்றது.