"ஆளுமை:சுபானி, ஸ்ரீரங்கராயன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=சுபானி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
| (பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 18: | வரிசை 18: | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
* [https://www.youtube.com/watch?v=ouvPrq9sVBQ சுபானி, ஸ்ரீரங்கராயன் கவிதை இணையத்தில்] | * [https://www.youtube.com/watch?v=ouvPrq9sVBQ சுபானி, ஸ்ரீரங்கராயன் கவிதை இணையத்தில்] | ||
| + | |||
குறிப்பு :மேற்படி பதிவு விஜயதீபா, இரத்தினம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது. | குறிப்பு :மேற்படி பதிவு விஜயதீபா, இரத்தினம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது. | ||
| + | |||
| + | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
| + | [[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]] | ||
| + | [[பகுப்பு:பெண் கவிஞர்கள்]] | ||
10:33, 11 சூன் 2019 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | சுபானி |
| தந்தை | ஸ்ரீரங்கராயன் |
| தாய் | லெட்சுமி |
| பிறப்பு | 1995.03.24 |
| ஊர் | களுத்துறை |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சுபானி, ஸ்ரீரங்கராயன் (1995.03.24) களுத்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஸ்ரீரங்கராயன்; தாய் லெட்சுமி. ஆரம்ப , இடைநிலைக் கல்வியை களு/பாரதி தமிழ் மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை கொ/விவேகானந்தா கல்லூரியிலும் கற்றார். யாழ் பல்கலைக்கழக மெய்யியல் (சிறப்புக்கலை) மூன்றாம் ஆண்டு மாணவி. கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், பாடல்கள் எழுதுவது (பாடலாசிரியர்) ஆகிய பன்முகத் திறமைகளைக் கொண்டவர் சுபானி. இவரின் கவிதைகளை நதியோர நாணல்கள் இலக்கிய மன்றம், கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம் இலக்கிய மன்றம், தேனீ கலை இலக்கிய மன்றம், படைப்பு கவியுலகப் பூஞ்சோலை ஆகிய முகநூல் குழுமத்தில் இவரின் கவிதைகள் வெளிவருகின்றன. இலக்கியப் பூந்தோட்டம் குழுமத்தால் (2018)ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மின்னூல்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. ஆகாயக் கனவுகள் ஆனிமாத மின்னூல், தமிழ்வாழும் தீவு புரட்டாசி மாத மின்னூல், கவிமலர் பைந்தமிழ்ச் சங்கம் நடத்திய உலக சாதனை நூல் வெளியீட்டிலும் இவரின் கவிதைகள் வெளியாகியுள்ளன. தேனீ கலை இலக்கிய மன்றத்தால் தேனீயின் தேடலில் விரிந்த மொட்டுக்கள் நூலிலும் ”தாய்மை” என்ற தலைப்பில் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது. 2017ஆம் ஆண்டு முகநூலின் ஊடாக எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார் சுபானி. இவரின் கவிதைகள் புரட்சிக் கவிதைகளாக இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
விருதுகள்
கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம் நடாத்திய உலக சாதனை நிகழ்வில் Universal Achievers Book of the record & future kalams Books of the record ஆகிய விருதுகளை பெறற்றுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
குறிப்பு :மேற்படி பதிவு விஜயதீபா, இரத்தினம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.