ஆளுமை:சண்முகநாதன், பாலகிருஷ்ணசாமி
| பெயர் | சண்முகநாதன் பாலகிருஷ்ணசாமி |
| தந்தை | பாலகிருஷ்ணசாமி |
| தாய் | சின்னம்மா |
| பிறப்பு | 1922 |
| இறப்பு | 1986 |
| ஊர் | வேலணை |
| வகை | கலைஞன் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
நாதன் எனும் பெயரால் பலராலும் அறியப்படும் பாலகிருஷ்ணசாமி சண்முகநாதன் வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட புகழ் பெற்ற ஓவியர் ஆவார். இவர் சிறுவயது முதல் சிற்பங்களை ஆக்குவதிலும் சித்திரம் வரைதலிலும் கைதேர்ந்தவராக விளங்கினார். அக்காலத்து யாழ்ப்பாண திரையரங்குகளின் திரைப்பட விளம்பர ஓவியராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். புகைப்படத்துறையிலும் ஆர்வம் கொண்ட இவர் இந்தியாவில் புகைப்படத்துறையில் சிறந்துவிளங்கிய வீ. மெய்ப்பச் செட்டியார் அவர்களின் ஏ.வீ.எம் கலையகத்தில் புகைப்பட கலையினை பயின்றதோடு நாடு திரும்பியதும் யாழ் மண்ணில் நாதன் Studio என்ற புகைப்பட கலையகத்தை நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கும் அப்பால் அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர் 1956ஆம் ஆண்டு இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திலும், ஶ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலும் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 397-399