ஆளுமை:ஐயம்பிள்ளை, கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஐயம்பிள்ளை
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் பார்வதிப்பிள்ளை
பிறப்பு 16.08.1923
இறப்பு 23.08.1981
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஐயம்பிள்ளை, க.சோ. (16.08.1923- 23.08.1981) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரின் தந்தை கணபதிப்பிள்ளை; இவரின் தாய் பார்வதிப்பிள்ளை. இவர் ஶ்ரீ சண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் கல்வி அபிவிருத்திச் சபையின் தலைவராக இருந்துள்ளார். இப்பாடசாலையின் விளையாட்டு மைதானத்துக்கு 12 பரப்பு காணி வழங்கியுள்ளார்.

கண்ணகை அம்மன் கோவிலில் நீண்ட நாள் பொருளாளரான இவர், இக்கோவில் இராசகோபுரத்துக்கும், மகா கும்பாபிஷேகத்துக்கும், தேர்த்திருப்பணிக்கும் பெரும் பங்காற்றினார். அத்தோடு வல்லன்பதி இலுப்பண்டை நாச்ச்சிமார் கோவில் நிர்வாகசபை அங்கத்தவராகவும், வல்லன்பதி ஹரிஹரபுத்ர ஐயனார் கோவில் நிர்வாக சபைத் தலைவராகவும், மாங்குளம் பிள்ளையார் கோவில் நிர்வாக சபை அங்கத்தவராகவும், 1948 ஆம் ஆண்டு புங்குடுதீவு 9 ஆம் வட்டார பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் செயலாளராகவும் கடமையாற்றினார்.


1945 ஆம் ஆண்டு புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் வீதியில் சிலப்பதிகார விழா நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கை இந்தியத் தமிழ்ப் பேரறிஞர்கள் கலந்து கொண்டார்கள். இதற்கு இவர் பெரும் பங்குகாற்றினார். மேலும் இவர் குடிதண்ணீர்ப் பிரச்சனையை முன்னிட்டு 1966 ஆம் ஆண்டு கொழும்பு வாழ் புங்குடுதீவு மக்கள் சிலருடன் உள்ளூராட்சி அமைச்சர் மு.திருச்செல்வத்தைச் சந்தித்துக் குடிதண்ணீர்ப் பிரச்சனை சம்பந்தமாக எடுத்துரைத்ததன் பிரகாரம் புங்குடுதீவிற்கு ஒரு தண்ணீர் பவுசர் கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 267