ஈழத்தமிழர் தொன்மை
ஈழத்தமிழர் தொன்மை | |
---|---|
நூலக எண் | 565 |
ஆசிரியர் | சிற்றம்பலம், சி. க. |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் |
வெளியீட்டாண்டு | 2001 |
பக்கங்கள் | xxvi + 102 |
[[பகுப்பு:வரலாறு]]
வாசிக்க
- ஈழத்தமிழர் தொன்மை (5.36 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
இது பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுப் பேருரையாக வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்தேறு குடிகளல்லர். அந்த மண்ணின் மைந்தர்கள். அதன் பூர்வ குடிகள் என்பதை நிலவியல், சுற்றுச் சார்பியல், தொன்மை வரலாறு, மரபணுவியல், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், கலை, கலாசார ஆதாரங்களைக் கொண்டு நூலாசிரியர் நிறுவியுள்ளார். முன்னைய பல ஆய்வுகள் ஒருதலைப்பட்சமான போக்குடனும், பௌத்த மதக் கண்ணோட்டத்துடனும் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் இந்நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். பாளி-சிங்கள மொழி நூல்களான மகாவம்சம், தீபவம்சம் போன்றவற்றில் எதிர்மறையாகப் பேசப்படும் தமிழரின் தொன்மையை அவற்றை ஆதாரமாகக் கொண்டே மறுத்துரைப்பது இந்நூலின் மற்றொரு சிறப்பாகும்.
பதிப்பு விபரம்
ஈழத்தமிழர் தொன்மை. சி.க.சிற்றம்பலம். சென்னை 600008: ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம், இல.31, சேட் குடியிருப்பு முதல் தெரு, இரண்டாம் மாடி, எழும்பூர், 1வது பதிப்பு, மே 2001. (சென்னை 5: சேகர் ஆப்செட் பிரிண்டர்ஸ், 168, பெரிய தெரு, திருவல்லிக்கேணி).
xxvi + 102 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 60., இலங்கை ரூபா 150., அளவு: 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (# 2930)