ஆளுமை:யோகராசா, செல்லையா

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:37, 20 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Gopi, ஆளுமை:யோகராசா, செ. பக்கத்தை ஆளுமை:யோகராசா, செல்லையா என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகராசா
தந்தை செல்லையா
பிறப்பு 1949.12.17
ஊர் கரணவாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகராசா, செல்லையா (1949.12.17 - ) யாழ்ப்பாணம், கரணவாயில் பிறந்த ஆய்வாளர், எழுத்தாளர், பேராசிரியர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1973இல் கலைமாணிப் பட்டத்தினையும், முதுகலைமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். இவர் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியராகவும் பதவி வகித்தார்.

கருணை யோகன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள், ஈழத்து நவீன இலக்கியம், ஈழத்து நவீன கவிதை, ஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு, ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம், மாற்று நோக்கில் சில கருத்துக்களும் நிகழ்வுகளும் போன்றவை இவரது நூல்கள்.



இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 10323 பக்கங்கள் 08-12