ஆளுமை:கந்தையா, முத்தர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தையா
தந்தை முத்தர்
பிறப்பு 1917.04.07
ஊர் ஏழாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, முத்தர் (1917.04.07 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முத்தர். இவர் சி.கணேஷ்ஐயர், அருளானந்தம் ஆகியோரிடம் கல்வி பயின்றார்.

1936ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் பணியாற்றி வரும் இவர் சமயம், கலை சார்ந்த சுமாராக 18 நூல்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் சைவ சித்தாந்த வகுப்புக்களையும் நடத்தியுள்ளார்.

சைவசித்தாந்த பேரறிஞர், பண்டிதமணி, இலக்கிய கலாநிநி, மகாமகோஉபாத்தியார் ஆகிய பட்டங்களையும், இந்து கலாசார அமைச்சின் பரிசு, சாகித்திய மண்டலப் பரிசு, வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய பரிசு, இலக்கிய கலாநிதி பண்டிதமணி நினைவுப் பரிசு, சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பிறந்தநாள் நிதியப் பரிசு என்பவற்றையும் இவர் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 08
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 89-90