ஆளுமை:சபாரத்தினம், சுப்பிரமணியம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சபாரத்தினம், சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் செல்லம்மா
பிறப்பு 1930.06.26
இறப்பு 2013.03.11
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு.சபாரத்தினம் (1930.06.26 - 2013.03.11) புங்குடுதீவைப் பிறப்பிடமாவும் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர், பத்திரிகையாள. இவரது தந்தை பெயர் சுப்பிரமணியம், தாய் பெயர் செல்லம்மா. இவர் சசிபாரதி எனும் புனைபெயரில் சிறுகதைகளை எழுதியுள்ளார். வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய இவர் பின்னர் ஈழநாடு வாரமலரின் துணைஆசிரியராகவும் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் சிறிது காலம் முரசொலி பத்திரிகையிலும் பணிபுரிந்தார். யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

தத்துவார்த்தமாக சிறுகதைகள், குறுநாவல்களை தனக்கே உரியபாணியில் எழுதி நன்மதிப்பை பெற்றவர். தனது படைப்புக்களை நூல்களாகவும் வெளியிட்டார். இவரது குட்டிக் கதைகள் அடங்கிய நூல் ஆங்கிலத்திலும் வெளியானது. ஈழநாடு பத்திரிகையில் இவர் எழுதி வெளிவந்த ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து 'ஊரடங்கு வாழ்வு' என்னும் நூல் 1985 ஆம் ஆண்டில் தமிழியல் வெளியீடாக வெளிவந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 146
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 42

வெளி இணைப்புக்கள்