ஆளுமை:குணரத்தினசிங்கம், வீ. கே.

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:24, 1 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணரத்தினசிங்கம், வி. கே.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வி.கே.குணரத்தினசிங்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் கொழும்பு ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியில் Diploma in Inogenous Medicine and Surgery எனும் பட்டம் பெற்று வைத்திய கலாநிதியானார்.

இவர் ஆரம்பத்தில் புங்குடுதீவு கிராமசபை மூலம் இலவச வைத்தியசாலையை ஆரம்பித்து பணியாற்றினார். இவரிடத்தே முன்னோரின் மருத்துவ அறிவும், நிறுவன ரீதியிலான நவீன ஆங்கில மருத்துவ அறிவும் ஒருங்கே சங்கமித்திருந்தன. பாரம்பரிய சைவத் தமிழ் மரபிலே தோன்றிய இவர் தமிழ், சோதிடம், சைவ சித்தாந்தம், இதிகாச புராணம் என்பவற்றிலும் தேர்ச்சிமிக்கவராக திகழ்ந்தார்.

1951ஆம் ஆண்டு இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட இலவச சத்துணவுத் திட்டம் மூலம் புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தில் சத்துணவு குறைபாடுடைய பிள்ளைகளுக்கு பால் உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்து அமுல்படுத்தினார். அத்தோடு இவர் கொழும்பு - புங்குடுதீவு நலன்புரிச் சங்க உறுப்பினராகவும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சங்க உறுப்பினராகவும், இலங்கை மூலிகை மருத்துவ ஆராய்ச்சி சபையின் தலைவராகவும், கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 225-226